“கலங்க வைக்கும் ‘இந்தியன் 2’ கிளைமாக்ஸ்!: பாபி சிம்ஹா

“கலங்க வைக்கும் ‘இந்தியன் 2’ கிளைமாக்ஸ்!: பாபி சிம்ஹா

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் `இந்தியன் 2′ வரும் வெள்ளிக் கிழமை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபு சிம்ஹா, சமுத்திரகனி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தியன் 2 படம் குறித்து கூறியிருக்கும் பாபி சிம்ஹா, “நான் அப்போது,   `வசந்த முல்லை’ படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது ஷங்கர் சார் அக்கா மகன் பப்பு  எனக்கு போன் செய்து, `இந்தியன் 2-ல நீங்க நடிக்கணும்’ என்றார்.  எனக்கு தாங்க முடியாத சந்தோசம்.பிறகுஷங்கர் சாரை சந்திச்சேன். கதை சொன்னார். க்ளைமாக்ஸ் சொல்லும்போது நெகிழ்ந்து போயிட்டேன்…  கண்கள் கலங்கிவிட்டன..

அது ரொம்ப எமோஷனலான சீன். அந்த சீன்ல நானும் இருக்கேன். அந்த காட்சி எடுத்தவுடனே, ஷங்கர் சார்கிட்ட `இப்படி ஒரு சீனை எனக்குக் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்”னு சொல்லிட்டு வந்தேன்.”” என்றார் பாபி சிம்ஹா.

மேலும், “இந்தியன் 2′ படப்பிடிப்பின்போது, கமல் சாரை இந்தியன் தாத்தா கெட்டப்ல… பார்க்கும்போது சிலிர்த்து போயிட்டேன். நடிக்கும்போது அவர் கண்களைப் பார்க்க பயமா இருந்துச்சு. ரெண்டு, மூணு டேக் ஆன பிறகு, தைரியம் வர வழைச்சுக்கிட்டு நடிச்சேன்” என்றார்.

 

 

Related Posts