சென்னை ரெடியா? அதிரவைக்க வர்றாங்க வேடன், அறிவு  & அசல் கோலார்!

சென்னை ரெடியா? அதிரவைக்க வர்றாங்க வேடன், அறிவு  & அசல் கோலார்!

பெங்களூரை ஆட்டம் காண வைத்த தென்னிந்தியாவின் மாபெரும் ஹிப்-ஹாப் திருவிழாவான “வணக்கம் வணக்கம்” இப்போது சென்னைக்கு வருகிறது! மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் என மூன்று மொழி கலைஞர்களையும் ஒரே மேடையில் இணைத்து, ஏப்ரல் 11 அன்று பெங்களூரில் நடந்த இசை நிகழ்ச்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

அங்கு வேடன், அறிவு, அசல் கோலார், சந்தன் ஷெட்டி மற்றும் காப்ரி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றனர். அந்த அதிரடியான வைப் இப்போது நம்ம சென்னைக்கும் பரவப்போகிறது!

Alt+ மற்றும் The High Culture இணைந்து நடத்தும் இந்த இசைப் பயணம், தென்னிந்திய இன்டிபெண்டென்ட் இசையை உலகத்தரம் வாய்ந்த கலாச்சார அடையாளமாக மாற்றி வருகிறது. பெங்களூரைத் தொடர்ந்து சென்னையிலும், அதன் பிறகு ஹைதராபாத், மும்பை என இந்தியாவைக் கடந்து சர்வதேச அளவிலும் இந்த இசை அதிரடி தொடர உள்ளது.

ரசிகர்களே, தென்னிந்திய ஹிப்-ஹாப் உலகத்தின் இந்த பிரம்மாண்ட சங்கமத்தைக் கொண்டாடத் தயாராகுங்கள்!

Related Posts