ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் செம மாஸாக களம் இறங்கும் ருக்மிணி வசந்த்!

 ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் செம மாஸாக களம் இறங்கும் ருக்மிணி வசந்த்!

சினிமா உலகில் தற்போது ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டிருக்கும் செம க்யூட் மற்றும் திறமையான நடிகை ருக்மிணி வசந்த், தமிழ் திரையுலகில் அடுத்த அதகளத்திற்கு தயாராகிவிட்டார். சப்த சாகரதாச்சே எல்லோ மற்றும் காந்தாரா சாப்டர் ஒன் போன்ற படங்களில் தனது நச்சுன்னு நடிப்பால் ரசிகர்களின் இதயங்களை வென்ற இவர், இப்போது கணம் படத்தின் மூலம் முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் புதிய தமிழ் படத்தில் நாயகியாக இணைந்திருக்கிறார்.

இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தில் தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோரும் முதன்மை கதாபாத்திரங்களில் அசத்தப் போகிறார்கள். மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருனி சினி கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படைப்பில், ருக்மிணி வசந்த் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கு தாரா என்று பெயரிடப்பட்டுள்ளது.

படத்தின் அறிவிப்பை வழக்கமான முறையில் இல்லாமல், இன்ஸ்டாகிராம் ஆவணத் தொடர் வழியாக மிக வித்தியாசமான கோணத்தில் வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார் இயக்குநர். ஸ்ரீ கார்த்திக், தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோர் தாரா கதாபாத்திரத்திற்கான இறுதித் தேர்வில் கலந்துகொள்ளும் சுவாரஸ்யமான அந்த வீடியோ, இறுதியில் ருக்மிணி வசந்தின் மாஸான என்ட்ரியுடன் நிறைவடைந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

கடந்த கால நிஜ அனுபவங்களையும் கற்பனை வடிவ காட்சிகளையும் அழகாக இணைத்து, மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கையாண்டுள்ள இந்த புதுமையான விளம்பர உத்தி சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது. திறமையான கலைஞர்களின் கூட்டணியும், வித்தியாசமான கதை சொல்லல் முறையும் இணைந்து உருவாகி வரும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் சுவாரஸ்யமான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளிவரும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts