‘செய் செய்யாதே’: ‘ரீல் & ரியல் ஸ்டார்’ எச்.ராஜா போதைப் பொருளை ஒழிக்க களம் இறங்குகிறார்! 

‘செய் செய்யாதே’: ‘ரீல் & ரியல் ஸ்டார்’ எச்.ராஜா போதைப் பொருளை ஒழிக்க களம் இறங்குகிறார்! 

வெறும் பொழுதுபோக்கோடு நின்றுவிடாமல், சமூகத்திற்குத் தேவையான விநாடி விழிப்புணர்வை அள்ளித் வழங்கும் புதிய படைப்புதான் ‘செய் செய்யாதே’ ! வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் கோலாகலமாக வெளியாகிறது.

என்ன ஸ்பெஷல்?

இன்றைய இளைய தலைமுறையைச் சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கம், மருத்துவ விழிப்புணர்வின் அவசியத்தை உணர்த்துவது, மனித உயிரின் மதிப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம் என அத்தனை முக்கியமான சமூகக் கருத்துகளையும் மையமாகக் கொண்டு இப்படம் அதிரடியாக உருவாக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, செவிலியர்களின் உன்னத சேவை, குடும்ப உறவுகளின் பலம் மற்றும் சமூகத்தின் மீதான ஒவ்வொருவரின் பொறுப்பு ஆகியவற்றைப் பலமான திரைக்கதையோடு கண்முன்னே நிறுத்துகிறது படக்குழு!

நட்சத்திரக் கூட்டணி!

  • ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் பிரம்மாண்டமாகத் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் டாக்டர் எஸ். ராஜா (M.D., USA).

  • குரு விஜய் கதாநாயகனாக மிரட்ட, தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி எனப் பட்டாளமே கலக்கியுள்ளது.

  • இவர்களுடன் தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவரான பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, தமிழ்நாடு முதலமைச்சர் கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது!

படக்குழு விபரம்:

  • எச். ராஜா – தமிழ்நாடு முதலமைச்சர்

  • டாக்டர் எஸ். ராஜா – டாக்டர் சந்திரபோஸ்

  • குரு விஜய் – டாக்டர் விஜய்

  • தர்ஷினி ரெட்டி – டாக்டர் விஜயலட்சுமி

  • பிரதிக்ஷா மனோ பிரசாந்த் – திவ்யா (குழந்தை நட்சத்திரம்)

  • சிதம்பரம் PDK – தங்கதுரை

  • மௌனிகா ப்ரீத்தி V – டாக்டர் மௌனிகா

  • தபிதா குணரத்னே – டாக்டர் பிரியா

தொழில்நுட்பப் படைப்பாளிகள்:

  • தயாரிப்பு: ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்

  • தயாரிப்பாளர்: சுப்புலட்சுமி ஜெயராம் (B.Sc, California, USA)

  • ஒளிப்பதிவு: வாசு பி. ராம்நாத்

  • படத்தொகுப்பு: ராஜா முகமது

  • இசை: டாக்டர் எஸ். ராஜா & ஹரிணி சுப்பு மியூசிக் டீம்

  • சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் கார்த்திக்

சமூகப் பொறுப்புடன் தயாராகியுள்ள ‘செய் செய்யாதே’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்ற உற்சாகத்தில் உள்ளது முழுப் படக்குழுவும்!

Related Posts