LWB: ஹீரோவான ‘விக்கல்ஸ்’ விக்ரம் ஹீரோயினாக ஃபிட்னஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா.!

LWB: ஹீரோவான ‘விக்கல்ஸ்’ விக்ரம் ஹீரோயினாக ஃபிட்னஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா.!

 ஸ்டாண்ட் அப் காமெடி மேடைகளில் சரவெடியாய் வெடித்து, பிக் பாஸ் வீட்டின் செல்லப் பிள்ளையாக மாறி, டிஜிட்டல் திரையில் இளம் தலைமுறை ரசிகர்களின் ஃபேவரைட் ஸ்டாராக வலம் வரும் விக்கல்ஸ் விக்ரம், இப்போது வெள்ளித்திரையில் கதையின் நாயகனாக அடியெடுத்து வைக்கிறார். அவர் ஹீரோவாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இயக்குநர் கே.சி. குரு இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம் ஒரு பக்காவான ரொமான்டிக் காமெடி ஜானர். மேடையில் மைக் பிடித்தாலே அதிரடி காட்டும் விக்கல்ஸ் விக்ரம், இந்த விழாவையும் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ போலவே கலகலப்பாகத் தொடங்கினார். 2016-ல் தியேட்டர் ஆர்டிஸ்டாகத் தொடங்கி, சோசியல் மீடியா மூலம் அடையாளம் கண்டு, இன்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டுப் பிள்ளையாக மாறியிருப்பதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். பத்து வருட போராட்டத்திற்குப் பிறகு, வெளியில் சொல்லக்கூட வெட்கப்பட்ட ஒரு கனவு இன்று நிஜமாகியிருக்கிறது என அவர் உற்சாகமாகப் பேசினார்.இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். ஒரு மெலிந்த தேகம் கொண்ட ஸ்டாண்ட் அப் காமெடியனுக்கும், கட்டுமஸ்து உடல்வாகு கொண்ட ஒரு பெண் பாடி பில்டருக்கும் இடையிலான சுவாரசியமான காதலும் மோதலும் தான் இந்த ‘லைட் வெயிட் பேபி’. படத்தின் டைட்டில் போஸ்டரில் ஒரு பக்கம் மைக் ஸ்டாண்டும், மறுபக்கம் பெரிய எடையும் இருப்பது கதையின் அந்த ‘இம்பேலன்ஸ்’ பின்னணியைச் சொல்லாமல் சொல்கிறது.

ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார், பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்கிறார். சாகர் சந்தேஷ் மற்றும் ஜி. திம்மா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். புதுமையான கதைக்களத்தோடு வெள்ளித்திரையில் தடம் பதிக்கும் இந்த ‘பேபி’, கோலிவுட்டில் ஒரு கலகலப்பான மேஜிக் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts