ராஜ் அய்யப்பா, டெல்னா நடிக்கும் ‘லவ் இங்க்’: அதகள வில்லனாக சுனில் ரெட்டி!

ராஜ் அய்யப்பா, டெல்னா நடிக்கும் ‘லவ் இங்க்’: அதகள வில்லனாக சுனில் ரெட்டி!

இன்றைய இளம் தலைமுறையினரின் காதல், கொண்டாட்டம் மற்றும் கலாட்டாக்களை மையமாகக் கொண்டு உருவகி வரும் இளமைத் துள்ளல் நிறைந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘லவ் இங்க்’. எம்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ஏ. மகேந்திரன் வழங்க, மேகராஜ் தாஸ் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

களமிறங்கிய கெத்து வில்லன்!

ராஜ் அய்யப்பா மற்றும் டெல்னா டேவிஸ் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், படத்தின் முக்கிய அம்சமாக நடிகர் சுனில் ரெட்டி வில்லன் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்! சென்னையில் நடைபெற்று வரும் இந்த இறுதி கட்டப் படப்பிடிப்பில் அவர் பங்கேற்றுள்ள செய்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.

நவீன காதல் & சிரிப்பு மழை!

சமகால இளைஞர்களின் உறவுகள், உணர்வுகள் மற்றும் அதில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களை ரசிக்கும்படியான நகைச்சுவையுடன் ‘லவ் இங்க்’ பேசவுள்ளது. இளைஞர்களை மட்டுமின்றி குடும்பங்கள் அனைத்தும் கொண்டாடும் வகையில் இப்படம் செதுக்கப்பட்டு வருகிறது.

  • இயக்கம்: மேகராஜ் தாஸ்

  • நடிப்பு: ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ், சுனில் ரெட்டி, ஆர்த்தி, ரவி மரியா, மைம் கோபி, பட்டிமன்றம் ராஜா, ரமா, சுபாஷினி, வினோத் முன்னா, கேபிஒய் வினோத், மௌரிஷ்.

  • இசை: தரண் குமார்

  • ஒளிப்பதிவு: ஐ. மருதநாயகம்

  • படத்தொகுப்பு: புவன்

  • கலை இயக்கம்: ராமு தங்கராஜ்

டிசம்பரில் ரிலீஸ் கொண்டாட்டம்!

சென்னை மற்றும் செய்யாறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு, தற்போது சென்னையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு பக்கா என்டர்டெயின்மென்ட் விருந்து படைக்க படக்குழு தயாராகி வருகிறது!

Related Posts