“நெகிழ வைக்கும் வரவேற்பு!”: ‘LIK’ தேங்ஸ் மீட்டில் நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்!

“நெகிழ வைக்கும் வரவேற்பு!”: ‘LIK’ தேங்ஸ் மீட்டில் நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்!

மிழ் திரையுலகில் புதுமையான ஒரு ‘ஹை-கான்செப்ட்’ காதல் கதையாக வெளியாகி, ரசிகர்களின் ரசனையைத் தட்டித் தூக்கியிருக்கிறது விக்னேஷ் சிவனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK). ஏப்ரல் 10-ல் வெளியான இந்தப் படம், தியேட்டர்களில் திருவிழா கோலம் பூண்டிருக்கும் நிலையில், அதன் வெற்றிக் கொண்டாட்டமும் நன்றி அறிவிப்பு விழாவும் சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது.

நிகழ்வில் பங்கேற்றுப் பேசியவர்களின் ஹைலைட்ஸ் இதோ:

இயக்குநர் ஜெகன்

“விக்னேஷ் சிவனின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த வெற்றி இது. தம்பி பிரதீப் நான்காவது படத்திலேயே மக்களின் வீட்டுப் பிள்ளையாக மாறிவிட்டார். சீமான் அண்ணனையும் விக்னேஷ் சிவனையும் இணைத்ததில் எனக்குப் பெருமை.”

நடிகை கௌரி

“சவால்களைத் தாண்டி ‘கல்கி’ கதாபாத்திரத்திற்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு நெகிழ்ச்சி அளிக்கிறது. இது நட்பையும் அன்பையும் கொண்டாடும் தற்காலத் தலைமுறைக்கான படம்.”

நடிகை தீபிகா வெங்கடாச்சலம்

“பார்வையாளராகவும் படக்குழுவாகவும் இந்தப் படத்தை ரசித்தேன். பிரதீப்பின் பயணம் பலருக்கு ஊக்கம். இது ஒவ்வொரு பெண்ணிடமும் சேர வேண்டிய அழகான படைப்பு.”

நடிகை கிருத்தி ஷெட்டி

“தமிழ் மொழியும் மக்களும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இன்றைய ‘மொபைல் உலக’ தனிமையை என் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. ரவி வர்மன் என்னை அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கிறார்.”


நடிகர் எஸ்.ஜே.சூர்யா: “விக்னேஷ் சிவன் ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட்!”

“விக்னேஷ் சிவன் என் மீது வைத்திருக்கும் அன்பு அளவிட முடியாதது. ஒரு சீனுக்காகக் கோடிகளைச் செலவு செய்து, ஆடியன்ஸை எண்டர்டெயின் பண்ண நினைப்பவர். மலேசியா, டொரண்டோ என உலகம் முழுவதிலிருந்தும் பாசிட்டிவ் மெசேஜ்கள் குவிகிறது.

தம்பி பிரதீப் ரங்கநாதனுக்குக் கடவுளின் ஆசீர்வாதம் அதிகம். ஏழு வருடம் முன்பே அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்று சொன்னேன், அது இன்று நிஜமாகியிருக்கிறது. அனிருத்தின் இசை படத்தின் ஆன்மா. சீமான் சார் வரும்போது தியேட்டரே அதிர்கிறது. நவீன தொழில்நுட்பம் நம்மை ஆளக்கூடாது என்ற அழகான மெசேஜை விக்னேஷ் சிவன் இதில் சொல்லியிருக்கிறார்.”

நடிகர் பிரதீப் ரங்கநாதன்: “தடைகளைத் தாண்டிய அன்பு!”

“மூன்று நான்கு வருடப் பயணம் இது. பலமுறை ரிலீஸ் தேதிகள் தள்ளிப்போனதால் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், தியேட்டரில் கிடைத்த ஓப்பனிங் என் எதிர்பார்ப்பை மிஞ்சிவிட்டது. தொழில்நுட்பக் கலைஞர்களான ரவி வர்மன் சார், எடிட்டர் பிரதீப் ராகவன் மற்றும் அனிருத் சார்—இந்த மூவரும் இல்லாமல் இந்த ‘LIK’ சாத்தியமே இல்லை. பின்னணியில் இருந்து உழைத்த இவர்களுக்குப் பெரிய நன்றிகள். பத்திரிகை நண்பர்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்குப் பலம்.”

இயக்குநர் விக்னேஷ் சிவன்: “இது என் கனவுப் படைப்பு!”

“இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு பிளாக்பஸ்டர்தான். கம்ஃபர்ட் ஜோனை உடைத்து என்னை நானே சவாலுக்கு உட்படுத்தி எடுத்த படம் இது. ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக இருப்பது போன்ற விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்கிறேன். ஆனால், ஒரு புதிய அனுபவம் கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

பிரதீப் ஒரு ஹீரோவாக மட்டுமல்ல, சிறந்த அர்ப்பணிப்புள்ள கலைஞனாக உழைத்திருக்கிறார். குறிப்பாக ஸ்விம்மிங் பூல் காட்சியில் அவர் காட்டிய உறுதி பிரமிக்க வைத்தது. எடிட்டர் பிரதீப் ராகவன் இந்தப் படத்திற்காக 10 படங்களுக்குச் சமமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் லலித் சார் மற்றும் நயன்தாரா கொடுத்த ஊக்கத்தால் தான் இந்த மேஜிக் திரையில் சாத்தியமானது. படம் விரைவில் 100 கோடி கிளப்பில் சேரும் என்று நம்பிக்கையோடு சொல்கிறேன்!”


ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், ராக்ஸ்டார் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாகத் திரையரங்குகளில் நடைபோடுகிறது!

Related Posts