Teenz: “என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்!”:  பார்த்திபன் அதிரடி!

Teenz: “என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்!”:  பார்த்திபன் அதிரடி!

பார்த்திபன் என்றாலே வித்தியாசமான சிந்தனை என்று அர்த்தம். இதை வரும் வெள்ளிக்கழமை வெளியாக இருக்கும் தனது டீன்ஸ் படத்திலும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

தற்போது டீன்ஸ் பட போஸ்டரில், “எதற்காகவும் நான் என்னை குறைத்து கொண்டதே இல்லை. பட் டீன்ஸ் படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.100 மட்டுமே. இதில் நட்டமே இல்லை. வசதி குறைவானவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே” என்று பார்த்திபன் தெரிவித்து இருக்கிறார்.

 

டீன்ஸ் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. குழந்தைகளை வைத்து பெரியவர்களுக்கும் பாடம் எடுக்கப்போகிறார் பார்த்திபன்.. அதுவும் வழக்கம்போல சுவராஸ்யத்துடன் என்பது தெரிகிறது.

ஆக, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் டீன்ஸ் படத்தை, குறைந்த கட்டணத்தில் பார்க்கலாம் என்பது கூடுதல் மகிழ்ச்சிதான் ரசிகர்களுக்கு!

 

Related Posts