டோபமைன்@2.22: திரைப்பட விமர்சனம்

டோபமைன்@2.22: திரைப்பட விமர்சனம்

வெப்படம் குளிர் மழை படத்தில் நடித்த தீரவ், இயக்கி, நடித்துள்ளதோடு, பாடல்கள், எடிட்டிங் என களம் புகுந்துள்ள படம் டோபமைன்@2.22.

ஒரு அபார்ட்மெண்ட்டில் ஆபாச வீடியோவுக்கு அடிமையான இளைஞர், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான நபர், லிவிங் டு கெதர் தம்பதி, வீடியோ கேமுக்கு அடிமையான சிறுவன், எப்போதும் புறணி பேசும் பெண்மணி… இப்படி பல தரப்பினர் வசிக்கின்றனர்.

அங்கு 2.22 மணிக்கு கொலை நடக்க இருப்பதாக தகவல் கிடைக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை வித்தியாசமான த்ரில்லராக சொல்லி இருக்கிறார்கள்.திரவ், விஜய் டியூக், விபிதா, நிகிலா சங்கர், சத்யா, அந்த சிறுவன்… என அனைவருமே இயல்பான நடிப்பை அளித்து கவர்கிறார்கள்.பிருதிவி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு, ஆலன் ஷோஜியின் இசை, தீரவின் எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு பலம்.

க்ரைம் த்ரில்லர் என்றாலும் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ள படம். போர்ன் வீடியோ, ஆன்லைன் ரம்மி, கேம்ஸ் என செல்போன் மூலம் வீட்டுக்குள் புகும் பூதங்களின் விளைவுகளை சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்கள். புறணி பேசுவது தவறு என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

எல்லாம் சரிதான்…திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்வதை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட பிறகு அதையும் “கெட்ட” லிஸ்டில் சேர்த்தது ஏன் என்று தெரியவில்லை.

1.30 நிமிடங்கள்தான் படம்.

சுவாரஸ்யத்தோடு, தற்போது அவசிமான அறிவுரைகளையும் சொல்லி இருக்கும் படம்.
திரையரங்க வெளியீடு இல்லை; சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் பார்க்கலாம்.

 

 

 

.
,

 

Related Posts