இயக்குநர் மோகன் ஜி கைது: காரணம் இதுவா?

இயக்குநர் மோகன் ஜி கைது: காரணம் இதுவா?

திரைப்பட இயக்குநர் மோகன்ஜி கைது செய்யப்பட்டு உள்ளதாக  தகவல் பரவியது. இந்நிலையில், அரசியல் பிரமுகர் அஸ்வத்தாமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட்டத்தை இயக்கி, திரையுலகில் கால் பதித்தவர் மோகன்ஜி. தொடர்ந்து திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசுரன் ஆகிய படங்களை இயக்கினார்.

திரவுபதி, ருத்ரதாண்டவம் ஆகிய திரைப்படங்கள் சாதி ஆதிக்கத்தை முன்னிலைப்படுத்துவதாக  இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. பகாசுரன் படத்தில் அது போன்ற காட்சிகள் இல்லாவிட்டாலும்,  மோகன் ஜியின் முந்தையை படங்களை மனதில் வைத்து,  இந்தப் படத்தையும் சாதி ரீதியிலானது என சிலர் விமர்சித்தனர்.

இதற்கிடையே மேடைகளிலும், தனது சமூகவலைதள பக்கங்களில் அதிரடியான கருத்துக்களை தெரிவிப்பது மோகன்ஜியின் வழக்கம்.

சமீபத்தில்கூட, ஆன்மிக பேச்சாளர் சுகிசிவம் அவர்களை, சம்ஹாரம் செய்ய வேண்டும் என மோகன் ஜி பேசியதும்  சர்ச்சையானது.

இந்நிலையில்தான் அரசியல் பிரமுகர் அஸ்வத்தாமன், தனது எக்ஸ் தள பக்கத்தில்,”  சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி  அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம் என தெரியவில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மோகன்ஜியின் கைதுக்கு காரணமாக இரண்டு விசயங்களை யூகிக்கப்படுகின்றன.

ஒரு கூட்டத்திதில், “ஆன்மிக பேச்சாளர் சுகிசிவத்தை சம்ஹாரம் செய்ய வேண்டும்” என்று மோகன் ஜி பேசினார்.

வீடியோ பேட்டி ஒன்றில், “பிரபல கோயில் பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக்குறைவு மாத்திரை கலக்கப்படுகின்றன” என்று மோகன் ஜி பேசினார்.

இந்த இரண்டும் சர்ச்சையானது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என யூகத் தகவல் உலவுகிறது.

அதே நேரம், “மேற்கண்ட இரு காரணங்களுக்காக என்றால் சென்ன சிசிபி போலீஸார் கைது செய்து இருப்பார்கள். அப்படி நடவடிக்கை ஏதும் நடந்ததாக தெரியவில்லை.  அதே நேரம் அடிதடி போன்ற பிரச்சினையாக இருந்தால், லோக்கல் போலீஸ் ஸ்டேசனில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து இருப்பார்கள். அப்படி ஏதும் நடந்து இருக்கலாம்”  என்கிற தகவலும் உலவுகிறது.

Related Posts