Dhilraja: “மகாராஜா பட தயாரிப்பாளருக்கு லாபமில்லை.. தூக்கமில்லை!”: திருமலை ஆதங்கம்
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிக்க, சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும்திரைப்படம், தில் ராஜா.
விஜய் சத்யா, ஷெரீன், மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அம்ரீஷ் இசையமைத்துள்ளார். மனோ வி.நாராயணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, சிறப்பாக நடந்தது.
நிகழ்வில் தயாரிப்பாளர் திருமலை, ” சினிமாவிற்கு ஏற்ற ஒரு டைட்டில், ஒவ்வொரு படமும் திரைக்குக் கொண்டுவருவதில் மாபெரும் போராட்டம் இருக்கிறது. இந்த 27 ஆம் தேதி எத்தனை படங்கள் வருகிறது என உங்களுக்குத் தெரியும், கார்த்தி சார் படத்துக்கு இணையாக இந்த போஸ்டர் இருக்கிறது.
மகாராஜா எவ்வளவு பெரிய ஹிட் எனத் தெரியும் ஆனால், அந்தப்பட புரடியூசரே தூக்கமில்லாமல் இருக்கிறார் அவருக்கு லாபமில்லை” என்றார் வருத்தமாக.
ம்.

