விடாமுயற்சி: விமர்சனம்

விடாமுயற்சி: விமர்சனம்

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்க, அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தின் படம் வெளியாகிறது என்பதால், அவரது ரசிகர்கள் “வழக்கமான தல படம்” என்ற அதீத எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இயக்குநர் மகிழ் திருமேனி, “வழக்கமான அதிரடி ட்சிகள், பஞ்ச் வசனம் என கமர்ஷியல் அம்சம் இருக்காது” என்று தொடர்நது சொல்லி வந்தார்.

ஆனாலும், “ஆங்கிலப் படத்தின் ரீமேக்கான இது, ஹாலிவுட் தரத்தில் இருக்கும்” என்று ரசிகர்கள் நம்பினர்.படம் எப்படி இருக்கிறது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா… பார்ப்போம்.

அர்ஜுன், கயல் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். 12 வருட திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்படுகிறது. கயலுக்கு இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட… விவாகரத்து கோருகிறார். இதற்கு ஒப்புக்கொள்கிறார் அர்ஜூன். விவாகரத்து வழக்கு முடியுட் வரை, கயல் தன் தாயாரின் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறார். அதை ஏற்று, அவரை காரில் அழைத்துச் செல்கிறார் அர்ஜூன்.

அஜர்பைஜானின் பாலைவனச் சாலையில் தன்னந்தனியே பயணிக்கிறது கார். இடையில் அது மக்கர் செய்கிறது. தவித்து நிற்கிறார்கள். அப்போது வழியில் டிரக்கில் வருகிறது ஒரு ஜோடி. அவர்களும் தமிழர்கள்.

அவர்களது டிரக்கில் கயலை அனுப்பி வைத்து காரை சரி செய்ய என்ன செய்யலாம் என சிந்திக்கிறார் அர்ஜூன். கார் சரியாகிறது. ஆனால் கயலை காணவில்லை.

கயலை அர்ஜூன் கண்டுபிடித்தாரா… இருவரும் இணைந்தார்களா என்பதுதான் மீதிக்கதை.அர்ஜூனாக, அஜீத். இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை ஏற்றதற்கே அவரை பாராட்ட வேண்டும். மனைவியின் இன்னொரு காதலை ஏற்கும் அவரது பக்குவம், தன்னை புரிய வைக்க செய்யும் முயற்சி என சிறப்பாக நடித்து இருக்கிறார். வழக்கமான ஸ்டைலிஷ் குறையவில்லை.

ஆனால் அமைதி அமைதி எப்போம் அமைதி. அதோடு, இடைவேளை தாண்டியிலும் வில்லன்களிடம் அடிவாங்கிக்கொண்டே இருக்கிறார். அதுவும் ரத்தம் வர வர அடித்துத் துவைப்பது ஓவர். அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல.. நமக்கே பொறுக்கவில்லை.

கயலா, த்ரிஷா.

உதவ வரும் கதாபாத்திரங்களில் அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா. நன்றாக நடித்து உள்ளனர்.

ஆரவ் அசத்துகிறார்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு பற்றி தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆள் அரவமற்ற மலைகளையும், நீண்ட நெடுஞ்சாலைகளையும் கண் முன் நிறுத்தி இருக்கிறார.

அனிருத் இசை, வழக்கம் போல.

இந்த படத்தின் ஒரிஜினலான, பிரேக் டவுன் ஆங்கிலப்படத்தைப் பார்க்காதவர்கள்கூட, கணிக்கும்படியாக காட்சிகள் அமந்து உள்ளன. அஜித் – த்ரிசா பயணத்தின் இடையே வரும் அர்ஜூன் என்ன செய்யப்போகிறார், த்ரிசாவுக்கு என்ன ஆகும் என எல்லாமே முன் வரிசை சிறுவன் சொல்லிவிடுகிறான்.

நீரவ் சிறந்த ஒளிப்பதிவாளர்தான். ஆனால் பட்ஜெட் குறைபாடு என்பதாலோ என்னவோ எடுத்த காட்சிகளே மீண்டும் வந்துஅலுப்பு தட்டுகின்றன.

இடைவேளைக்குப் பிறகும் படத்தில் வரும் கார் ஸ்டன்ட் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டும், அஜித் ரசிகர்களுக்கு ஆறுதல்.

அதே நேரம், வீண் மசாலாக்களை கலக்காமல்,  ஆண் பெண் சமத்துவம், காதல் குறித்தெல்லாம் புரிந்துகொள்ள, அற்புதமான திரைப்படம்.

ரேட்டிங்: 3,8/5

.

 

 

Related Posts