‘மிரட்டாதே!”: எஸ்.ஐ.டியை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

‘மிரட்டாதே!”: எஸ்.ஐ.டியை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக  வளாகத்தில், மாணவி ஒருவரை, ஞானசேகரன் என்ற நபர்  பாலியல் துன்புறுத்தல்  செய்த சம்பவம் தமிழ்நாட்டில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்த வழக்கின் எப்.ஐ.ஆர். காப்பி சமூக ஊடகங்களில் வெளியாகி கூடுதல்  அதிர்ச்சிஅளித்தது.

தொழில்நுட்பக் கோளாறால்  எப்.ஐ.ஆர். கசிந்ததாக,  தேசியத் தகவல் மையம் தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்தது.

இந்நிலையில்,  மாணவி பாலியல் துன்புறுத்தல், எப்ஐஆர் கசிந்தது ஆகிய இரு சம்பவங்கள் குறித்தும் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்துமுதல் தகவல் அறிக்கையை பதிவிறக்கம் செய்த பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தியது.   அவர்களின் செல்போன்களையும் மின்னணுக் கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளது

இதற்கு பத்திரிகையாளர் மன்றம்  கண்டனம் தெரிவித்தது. மேலும், “விசாரணை என்ற பெயரில், பத்திரிகையாளர்களை மிரட்டும்  சிறப்பு புலனாய்வுக் குழுவின்நடவடிக்கையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்  பிப். 1 அன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கும்” என்று அறிவித்தது.

இதனபடி சென்னை பத்திரிகையாளர் மன்ற அலுவலக வளாகத்தில்  திரளான பத்திரிகையளர்கள கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து; பறிமுதல் செய்த செல்போன்களை உடனே திருப்பிக் கொடு’ என்ற பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டனர்.

Related Posts