தமிழ் சினிமாவின் புதிய ‘சூப்பர் ஹீரோ’: மிரட்டலான ‘சூப்பர் பி மேன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் சினிமாவின் புதிய ‘சூப்பர் ஹீரோ’: மிரட்டலான ‘சூப்பர் பி மேன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘மின்னல் முரளி’, ‘லோகா’ படங்களின் அதிரடி வரிசையில், தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஒரு புதிய சூப்பர் ஹீரோ தயாராகிவிட்டார்! ஃபேண்டஸி, சர்வைவல் த்ரில்லர் என மல்டி-ஜானரில் உருவாகியுள்ள ‘சூப்பர் பி மேன்’ படத்தின் முதல் பார்வை (First Look) வெளியாகி, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

யார் இந்த சூப்பர் பி மேன்?

ஆம்பிஷியஸ் புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், ‘3.33’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நம்பிக்கை சந்துரு இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன் எப்படி சூப்பர் ஹீரோவாக மாறுகிறான், அந்த மாற்றத்திற்குப் பின் இருக்கும் சவால்கள் என்ன என்பதை விறுவிறுப்பான சர்வைவல் த்ரில்லராக செதுக்கியுள்ளார் இயக்குநர் டி. ஜீவிதா கிஷோர்.

தேசிய விருதுக் கலைஞர்களின் கூட்டணி!

தொழில்நுட்ப ரீதியாக இப்படத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த ஒரு மெகா டீமே களம் இறங்கியுள்ளது:

  • இசை: ‘அனிமல்’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்கிறார்.

  • ஒலி வடிவமைப்பு: இதிலும் தேசிய விருது வென்ற சச்சின் சுதாகரன் கைகோர்த்துள்ளார்.

  • ஒளிப்பதிவு: சதீஷ் மனோகரனின் கேமரா கண்கள் இதுவரை பார்த்திராத ஒரு ஃபேண்டஸி உலகத்தை நமக்களிக்கப் போகிறது.

  • காஸ்ட்யூம்: ‘மின்னல் முரளி’யின் புகழ்பெற்ற வடிவமைப்பாளர் மெல்வி ஜே இந்த சூப்பர் ஹீரோ உடைக்கு உயிர் கொடுத்துள்ளார்.


“நிஜத்தன்மை கொண்ட ஒரு சூப்பர் ஹீரோ கதையை, விஷுவல் ட்ரீட்டாக தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என நம்பிக்கையூட்டுகிறார் இயக்குநர் ஜீவிதா கிஷோர்.

விரைவில் அதிரடி அப்டேட்ஸ்!

ஏற்கனவே ‘3.33’ மூலம் புதுமையான களத்தை தொட்ட தயாரிப்பு நிறுவனம், இந்த முறை இன்னும் பிரம்மாண்டமாக இறங்கியுள்ளது. படத்தின் நாயகி மற்றும் இதர நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. தமிழ் சினிமாவின் இந்த ‘நியூ ஏஜ்’ சூப்பர் ஹீரோ மேஜிக்கைக் காண தியேட்டர்கள் இப்போதே தயாராகி வருகின்றன!

Related Posts