4 ஹீரோ, 6 ஹீரோயின்.. என்ன கணக்கு? எதிர்பார்ப்பை கிளப்பும் புதிய படம்!

4 ஹீரோ, 6 ஹீரோயின்.. என்ன கணக்கு? எதிர்பார்ப்பை கிளப்பும் புதிய படம்!

18 ஸ்டெப்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பாக பிரியங்கா நாராயணன் தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீ இயக்கத்தில் நட்பு, காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் பாடல் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

பிக்பாஸ் பிரபலம் ராணவ், ‘சிறகடிக்க ஆசை’ மனோஜ் ஸ்ரீதேவா, சீயானே வினோத், ஹர்ஷித் ரெட்டி ஆகிய நான்கு பேரும் நண்பர்களாகக் களமிறங்கும் இப்படத்தில், டகால்டி நாயகி ரித்திகா சென், சபாபதி நாயகி பிரீத்தி வர்மா, பாலிவுட் மாடல் இஷாத்தா சிங் உள்ளிட்ட 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குநர் பாண்டியராஜன், கஜராஜ், தயாரிப்பாளர் மூர்த்தி, மம்மூட்டியின் சகோதரி மகன் அஸ்கர் சவுதன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற எடிட்டர் நாகூரான் ராமசந்திரன், ஸ்டண்ட் இயக்குநர் பில்லா ஜெகன், நடன இயக்குநர் ஹரிகிரன் மற்றும் ஒளிப்பதிவாளர் பிரன்டன் சுஷாந்த் என பல பலம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். மேலும், பாடலாசிரியர் கு.கார்த்திக் இப்படத்திற்கு பாடல்கள், வசனம் மற்றும் திரைக்கதையை 80-ஸ் முதல் ஜென்சி தலைமுறை வரை ரசிக்கும்படி எழுதியுள்ளார். தரன்குமார் இசையில் முன்னணி பாடகர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை கேப்டன் ஆனந்த் கவனித்து வருகிறார்.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் துள்ளலாக தயாராகி வரும் இத்திரைப்படத்தின் முதல் போஸ்டர் மற்றும் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உண்மையான நட்புக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Related Posts