காளிதாஸ் ஜெயராமின் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’!
இயக்குநர் அஹம்மது கபீர் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமான ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் டிசம்பர் நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டருடன் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் லட்சுமி ஜோதிஷ், லால், பொப்பன் அலுமூடன், சஞ்சு சானிச்சென், சோசம்மா மற்றும் ரெஞ்சித் சேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், மகேஷ் புவனேந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். தமிழகத்தில் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.

