ராம் சரணின் ‘பெத்தி’ வருது… பட்டையக் கிளப்ப்போகுது!

ராம் சரணின் ‘பெத்தி’ வருது… பட்டையக் கிளப்ப்போகுது!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் புச்சி பாபு சனா கூட்டணியில் உருவாகியுள்ள கிராமத்து ஆக்ஷன் டிராமாவான பெத்தி படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. ரத்தம், வியர்வை, தூசியோடு ஆவேசமாக ராம் சரண் கத்தும் போஸ்டர் இப்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

படம் எப்போது வரும் என ஏங்கிய ரசிகர்களுக்கு செம ட்ரீட்! வரும் ஜூன் 4 ஆம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாகத் திரைக்கு வருகிறது பெத்தி. கோடை விடுமுறையின் இறுதிக்கட்டத்தில் வெளியாவதால், பாக்ஸ் ஆபீஸில் இந்தப் படம் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஹைதராபாத் செட்டில் எடுக்கப்பட்ட ஒரு சிறப்புப் பாடலோடு படப்பிடிப்பு இனிதே முடிந்தது. அந்தப் பாடல் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்! ராம் சரணுடன் ஜான்வி கபூர் ஜோடி சேர, சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, பொமன் இராணி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இதில் களம் இறங்கியுள்ளது. ரத்னவேலுவின் ஒளிப்பதிவும், அவினாஷ் கொல்லாவின் தயாரிப்பு வடிவமைப்பும் படத்திற்கு உலகத்தரம் வாய்ந்த காட்சிகளைத் தந்துள்ளன.

விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து வழங்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் ராம் சரணின் நடிப்பு மற்றும் நடனம் பெத்தியைத் திரையரங்குகளில் ஒரு வெடிக்கும் அனுபவமாக மாற்றப்போவது உறுதி! ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் சந்திக்கத் தயாராகுங்கள்!

Related Posts