‘டோலா’ படத்தின் இசை வெளியீடு…

இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் படம் ‘டோலா’. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (25.12.2019) நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்கள் தயாரிப்பாளர் டாக்டர் ஷாம், கதாநாயகன் ரிஷி ரித்விக், சண்டை பயிற்சியாளர் டேஞ்சர் மணி

மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் இயக்குநர் கே.பாக்யராஜ், ‘ஜாகுவார்’ தங்கம், இயக்குநர் ஆதிசந்திரன் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கே. பாக்கியராஜ் கூறும்போது இந்த படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் கதநாயகனும் நாககியும்  சரிசமமாக நடித்திருக்கின்றனர் படம் நல்ல வந்திருக்கு என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது,

 தயாரிப்பாளர்களை வரவேற்க வேண்டும். அப்போது தான் பெரிய படங்கள் உருவாகும். ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன். அதுதான் சினிமா. சினிமாவை நேசியுங்கள், அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தை எடுத்தேன். இப்படத்திற்குப் பிறகு ‘ரகுடு’ என்ற கேங்ஸ்டர் படம் அதிகப் பொருட்செலவில் எடுக்கவிருக்கிறோம் என்றார்.

சண்டை பயிற்சியாளர் டேஞ்சர் மணி

சண்டைக் காட்சிகள் என்று தனியாக இல்லாமல் பாடலுடன் வருவதுபோல் வித்தியாசமாக செய்திருக்கிறோம். சிறுசிறு விஷயங்களை எடுத்து சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறோம். கதாநாயகன் அட்டு டூப் போடாமல் நடித்திருக்கிறார் என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,

‘டோலா’ படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது இயக்குநர் நன்றாக  இயக்கியிருக்கிறார் என்பது தெரிகிறது. இசையும் நன்றாக இருக்கிறது.

இக்காலகட்டத்தில் சிறிய படம், பெரிய படம் என்ற வித்தியாசமில்லை. கதை நன்றாக இருந்தால் எந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் வெற்றியடையும் என்றார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும்போது,

தயாரிப்பாளருக்கு முதல் படம் எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும், படம் வெளியிடும் அளவிற்கு வருவதே வெற்றி தான். நடிப்பதில் பெரிய கலை இயக்குநரின் கருவை உள்வாங்கி முகபாவனை கொடுப்பதற்கு திறமை வேண்டும். அந்த பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் கதாநாயகி பிரேர்னா. நாயகன் ரிஷியும் நாயகியுடன் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார். அணில் மற்றும் மணி இருவரும் நன்றாக இசையமைத்திருக்கிறார் என்றார்.

இயக்குநர் ஆதிசந்திரன் பேசும்போது,

இப்படத்தைப் பற்றி பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றது. நான் ஏகலைவன் போல் இயக்குநர் பாக்யராஜிடம் இயக்கத்தைக் கற்றுக் கொண்டேன்.

பொதுவாக நான் பாடல்களிலும், இசையிலும் தலையிடுவேன். என் விருப்பத்திற்கேற்றாற்போல் இசையமைத்துக் கொடுத்த அணில் மற்றும் மணி இருவருக்கும் நன்றி.

நடிகர் சரண்ராஜ் பேசும்போது

என்னையும் என் மகனையும் வைத்து ‘ரகுடு’ படத்தைத் தயாரிக்கிறார் ஷாம்குமார். அசோக் இப்படத்தை இயக்குகிறார். இந்த வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி.

இயக்குநர் பாக்யராஜ் படம் இயக்குவதாக இருந்தால் நான் அப்படத்தை தயாரிப்பேன். கதாநாயகன் யாராக இருந்தாலும் நான் தயாரிப்பேன் என்றார்.

‘டோலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் நிறைவாக ‘டோலா’ படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது. அதன்பின்பு ஜோக்கர்ஸ் கிரியேஷன்ஸ்-ன் இரண்டாவது தயாரிப்பான ‘ரகுடு’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.

Related Posts