திரைப்படங்களில் மது அருந்துவது வேண்டாம்! ஜாகுவார் தங்கம் வேண்டுகோள்..!

திரைப்படங்களில் மது அருந்துவது வேண்டாம்! ஜாகுவார் தங்கம் வேண்டுகோள்..!

‘டோலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த திரைப்படத்தை 10 நாட்களிலேயே படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். நானும், பாக்யராஜும் நாமும் இதுபோன்று குறைந்த நாட்களில் ஒரு படத்தை எடுக்க வேண்டுமென்று பேசிக்கொண்டிருந்தேன்.

இப்படத்தின் டிரைலரையும், பாடல்களையும் பார்க்கும்போது ஒரு சில காட்சிகளில் பயம் ஏற்படும் அளவிற்கு சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களின் கடின உழைப்பிற்கு இப்படம் நிச்சயம் வெற்றிபெறும்.

நானும், கே.ராஜனும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு 100 திரையரங்கம் கிடைக்க வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிறோம்,

திரைப்படங்களில் மது அருந்துவது போன்ற காட்சிகளை எடுக்காதீர்கள். குறைந்தபட்சம் கதாநாயகனாகனாவது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காமல் இருக்க வேண்டும் என்றார்.

Related Posts