“இது எனக்கு மற்றொரு சித்திரை திருவிழா!”: ‘கருப்பு’ விழாவில் சூர்யா நெகிழ்ச்சி!
மதுரையில் நடைபெற்ற நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்பட இசை வெளியீட்டு விழா, ஒரு சினிமா விழாவாக மட்டுமில்லாமல் மதுரையின் கலாச்சார திருவிழாவாகவே மாறிப்போனது. அந்த விழாவில் படக்குழுவினர் பகிர்ந்த சுவாரசியமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தகவல்கள் ..
மதுரை மண்ணின் மீது தனக்கிருக்கும் தீராத காதலை வெளிப்படுத்திய சூர்யா, ரசிகர்களின் அன்பில் நனைந்து போனார்:
மதுரை பாசம்: “மதுரை சாப்பாடு, அரசியல், பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பு என எல்லாம் எனக்குப் பிடிக்கும். கடந்த 28 வருஷமா என்னை ஹீரோவா ஏத்துக்கிட்ட இந்த மதுரை மண்ணுக்கு நான் கடமைப்பட்டிருக்கேன்.”
-
சித்திரை திருவிழா: “மதுரை சித்திரை திருவிழாவுக்கு 5 லட்சம் பேர் கூடுவாங்க. இந்த கருப்பு இசை வெளியீட்டு விழாவையும் நான் ஒரு சித்திரை திருவிழாவாகவே பார்க்கிறேன்.”
-
படத்தின் ஹீரோ: “இந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை, கருப்பசாமி தான் ஹீரோ. எனக்குள் தெய்வம் குடிகொள்ளும் போது ஏற்பட்ட தாக்கத்தை நான் நேரடியாவே உணர்ந்தேன்.”
-
இயக்குநர் மற்றும் இசை: “பாலாஜி பன்முகத் திறமைசாலி. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஒரு நாளைக்கு 1,000 டியூன் போடுறாரு, அவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கு.”

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி: “கருப்பசாமி என் கையைப் பிடிச்சு கூட்டிட்டு வந்தார்!”
உணர்ச்சிகரமாகவும் கலகலப்பாகவும் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, படத்தின் பின்னால் இருந்த உழைப்பைப் பகிர்ந்தார்.
-
மதுரை சென்டிமென்ட்: “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கருப்பசாமி கோயிலுக்கு போனப்பவே, இசை வெளியீட்டு விழாவை மதுரையில் தான் நடத்தணும்னு முடிவு பண்ணிட்டேன்.”
-
சூர்யாவின் நம்பிக்கை: “வெறும் 45 நிமிஷம் தான் கதை சொன்னேன், சூர்யா சார் உடனே ஓகே சொல்லிட்டார். என் மனைவியே நம்பாம, உன் டைரக்ஷன்ல சூர்யா சார் நடிக்கிறாரா? என்று ஆச்சரியப்பட்டாங்க.”
-
மாஸ் சூர்யா: “முதல் பாதியில கமர்சியல், இரண்டாம் பாதியில ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கும் ஒரு உச்சகட்டம் இருக்கும். ஒரு மன்னன் தன் சிம்மாசனத்தை திரும்பப் பெற வர்ற மாதிரி சூர்யா சார் இதுல மாஸா இருப்பாரு.”

இசையமைப்பாளர் சாய் அபயங்கர்: “என் உடல் சிலிர்த்துப் போன தருணம்!”
-
“சூர்யா 45-க்கு நான் தான் மியூசிக்னு ட்விட்டர்ல நியூஸ் பார்த்தப்போ என் உடம்பே சிலிர்த்துடுச்சு. இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்துக்கு என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த சூர்யா சாருக்கு பெரிய நன்றி. பின்னணி இசை கண்டிப்பா மிரட்டலா இருக்கும்!”
-
மற்ற கலைஞர்களின் உற்சாகப் பேச்சு:
நட்டி நட்ராஜ்: “சூர்யா சாரோட அழகு இன்றும் மாறாம அப்படியே இருக்கு, அதுதான் அவரோட ரகசியம்!”
- கலை இயக்குநர் அருண் வெஞ்சரமூடு: “சூர்யா சாரோட தீவிர ரசிகன் நான். இந்தப் படத்துல ஒரு பாட்டுக்காக 85 அடி உயரத்துல ஒரு பிரம்மாண்ட அரிவாளை செஞ்சிருக்கோம். திரையில பார்க்கும்போது நீங்களே மிரண்டு போவீங்க!”

தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு: “பாலாஜி ஒரு தயாரிப்பாளரின் சுமையைக் குறைச்சு, படத்தை ஒரு திருவிழா மாதிரி பிரம்மாண்டமா எடுத்திருக்கார்.”
-
நடிகை ஷிவதா மற்றும் அனகா: “சூர்யா சாருடன் நடிச்சது கனவு நனவானது போன்ற ஒரு அழகான அனுபவம்.”
-
விநியோகஸ்தர் சக்திவேலன்: “இந்த வருஷம் சூர்யா சாருக்கு மூணு படம் ரிலீஸ் ஆகப்போகுது. இது சூர்யாவின் ஆண்டு என்று கொண்டாடப்படும்!”
முக்கிய தகவல்:
மதுரையே அதிரும் வகையில் மேளதாளங்களுடன் நடைபெற்ற இந்த விழா, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. கருப்பு திரைப்படம் வரும் மே 14-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பட்டாசாய் வெடிக்கத் தயாராகி வருகிறது!
