ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்த ‘வேட்டையன்’!
த.செ.ஞானவேல் – ரஜினி, அமிதாப், பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்து உள்ளது.
ஆளுநர் ரவிக்கு எப்போதுமே திரித்துப் பேசுவது வழக்கம்.
“ஆங்கிலேயர் இந்தியாவை உருவாக்கவில்லை. அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இமயமலை – தென்பகுதி கடல் வரை பாரத் என்று அழைக்கப்பட்டது. இது தர்மத்தை தலைமேல் வைத்து காத்த நாடாக இருந்தது.
ஆனால் இந்தியாவின் வளர்ச்சி எழுச்சியை அழிக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். முதலில் கல்வி முறையை அழிக்க முயன்றனர்” என்று பேசுவது ஆர்.என்.ரவி பேசினார். பேசுகிறார்.
ஆனால், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் “வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், இந்த பகுதியை பிடித்து ஆண்டனர். வரி என்கிற பெயரில் நாட்டின் வளத்தை பறித்தனர். இது வரலாற்று உண்மை.
அதே நேரம், ஆங்கிலேயர் வருகைக்கு முன் எல்லோருக்கும் ஒரு நீதி – சம நீதி – என்பது இருக்கவில்லை. சாதிக்கொரு நீதி என்பதே நடைமுறையில் இருந்தது. அதே போல, பிராமரணர்கள் உள்ளிட்ட மிகச் சில குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே கல்வி பயில முடிந்தது. ஆங்கிலேய ஆட்சியாளர்கள்தான், சட்டமியற்றி இந்நிலையை மாற்றினர். அனைவருக்கும் ஒரே சட்டம்… அனைவருக்கும் கல்வி என்ற நிலை வர ஆங்கிலேய ஆட்சியாளரே காரணம்” என்று தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமல்ல ஆங்கிலேயர் வருவதற்கு முன் அரசர்கள் காலத்தில் தர்மம் கோலோச்சியது என்கிறாரே சனாதன ஆர்.என்.ரவி…
அது எப்படிப்பட்டது.?
சின்னஞ்சிறு சிறுமிகளுக்கு திருமணம்… மிக வயது மூத்த மணமகன்… கட்டாய உறவில் இடுப்பு எலும்பு நொறுங்கி சிறுமிகள் ஆயிரம், ஆயிரம்… பேர்.. ஏன், லட்சம் லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.
மிக மூத்த வயது ‘கணவன்’ மாண்டு போக… சிறுமிகள் கட்டாயமாக உடன் கட்டை ஏற வைத்து கொலை செய்யப்பட்டனர்!
சரபோஜி காலத்து மோடி ஆவணம் சொல்லும் தஞ்சை சம்பவம் இதற்கு ஓர் உதாரணம்.
தப்பித்தவர்கள் ஆயுள் முழுதும் விதவையாகவே இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யப்பட்டனர்.
பிராமணர்கள் கொலை செய்தாலும் தண்டனை இல்லை என்கிற நிலை! பிரம்மஹத்தி தோசம் பிடித்துவிடும் என்கிற பயம்! ராஜராஜ சோழன்கூட தனது சகோதரன் ஆதித்ய கரிகாலனை கொலை செய்த பிராமணர்களுக்கு தண்டனை அளிக்கவில்லை.. நாட்டை விட்டு விரட்டினான்.. அவ்வளவுதான். காரணம், பிரம்மஹத்தி தோசம் பிடித்துவிடும் என்கிற பயம்.
இதே நிலைதான் ஆங்கிலேயர்கள் வந்த பிறகும் நீடித்தது.
பிரிட்டிஷ் ஆட்சியில் பிராமணர்கள் ஆங்கிலக் கல்வியைக் கற்று, பெரிய பதவிகளைப் பெற்றனர்.
நீதிமன்றங்களில் ‘மனு சாஸ்திரம்’ உள்ளிட்ட சமஸ்கிருத சாஸ்திர நூல்கள்தான் தீர்ப்பை வழங்கின. ஐரோப்பிய நீதிபதிகள் இருந்தாலும், அவர்களுக்கு மனு நீதிப்படி தீர்ப்பு சொல்லித்தர புரோகிதர்கள் உடன் இருந்தனர்.
“இது எங்கள் மதச் சட்டம்.. இதில் பிரிட்டிஷ் ஆட்சி தலையிடக் கூடாது” என்ற உறுதிமொழியை பிராமணர்கள் பெற்றனர். இதை ‘விக்டோரியா பிரகடனம்’ என்ற பிரபல பிரகடனம் சொல்கிறது.
இதுதான் ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கம் வரை, பாரத் நாட்டில் இருந்த நிலை.
ஆர்.என். ரவிக்கள் இதைத்தான், தர்மம் என கொண்டாடுகிறார்கள்.
இந்நிலையில்தான்,மனுசாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் வில்லியம் ஜோன்ஸ் என்ற பிரிட்டிஷ்காரர். அவர் ‘புரோகிதர்கள் கூறும் சாஸ்திர விளக்கங்கள் குழப்பமாக இருக்கிறது; அவர்கள் கூறும் விளக்கங்களை நம்ப முடியவில்லை’ என்று கூறினார்.
புரோகிதர்களை உடன் வைத்துக் கொள்ளும் முறையை பின்னாட்களில் நிறுத்தினர்.
பிறகு சதி, குழந்தை திருமணம், கொத்தடிமை முறை போன்றவற்றை தடுக்கும் சட்டங்களை இயற்றினர்.
இப்படி, மனு தர்மத்தை வீசி எறிந்துவிட்டு சமதர்ம சட்டத்தை கொண்டு வந்த ஆங்கிலேயர்கள் மீது பிராமணர்களுக்கு ஆத்திரம்.
இதற்கு ஓர் உதாரணம்தான் நெல்லை ஆட்சியராக இருந்த ஆஷ் துரையை வாஞ்சிநாதன் கொலை செய்த சம்பவம்.
அப்போது குற்றால அருவியில் பிராமணர்கள் உள்ளிட்ட சில ஆதிக்க சாதியினர் மட்டுமே குளிக்க அனுமதி இருந்தது. இதைத் தகர்த்து அனைவரும் குளிக்க உத்தரவிட்டார் ஆஷ்.
அது மட்டுமல்ல..
வழக்கம்போல் ஒரு நாள் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைப்பயிற்சி சென்றார் ஆஷ். சேரிப்பகுதியை கடக்கும்போது ஒரு பெண்ணின் அலறல்.
முத்தா ராவுத்தர், “அந்த பெண் நிறைமாத கர்ப்பிணி. பிரசவ நேரம். இரு நாட்களாக கத்தித் தீர்க்கிறாள். ஆனால் ஊர் வழியே செல்லக்கூடாது என்பதால், மருத்துவமனை செல்ல முடியவில்லை” என்கிறார்.
ஆஷ் தனது மனைவியின் உதவியோடு சாரட்டில் அந்தப் பெண்ணை, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்.
இதெல்லாம் சனாதனிகளுக்கு ஆஷ் மீது ஆத்திரம். திட்டம் போட்டு கொல்கிறார்கள்.
கொலை செய்த வாஞ்சிநாதன் பையில் ஒரு கடிதம்.
அதில், “ஆங்கில சத்துருக்கள் அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகின்றார்கள்” என்று எழுதி இருக்கிறார்.
ஆஷ் இறந்த ஒரு வார காலத்திற்குள் அயோத்திதாச பண்டிதர் தனது “தமிழன்” பத்திரிக்கையில் “சகல சாதி மனுஷரையும் சமமாக பாவித்தவர் கலெக்டர் ஆஷ்.!” என எழுதுகிறார்..
தந்தை பெரியாரும் ஆங்கிலேய அரசை இந்த விசயங்களில் ஆதரித்தார்… அதனால்தான் பிராமணர்கள் அவரை எதிர்த்தனர்..
இதற்கும் வேட்டையன் படத்துக்கும் என்ன தொடர்பு?
குழந்தை திருமணம், சதி தடுப்பு உள்ளிட்ட பல கொடூரங்களை களைய சட்டம் இயற்றினார்கள் அல்லவா ஆங்கிலேயர்கள்!
அது போலவே, 1813ல் கல்வி குறித்தும், 1834ல் அனைவருக்கும் சம நீதி என்பது குறித்தும் சட்டம் இயற்றினர்.
அதாவது அனைவருக்கும் கல்வி.. அனைவருக்கும் ஒரே நீதி!
அதற்கு முன் இல்லாத நிலை இது!
இந்த இரண்டையும், வேட்டையன் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே அமிதாப் வாயிலாக சொல்கிறது படம்.
ஆம்.. வெள்ளையர்கள் பாரத் பண்பாட்டை அழிக்க முயன்றனர், புராதண கல்வியை ஒழிக்க முயன்றனர் என்கிற ஆர்.என்.ரவிக்களுக்கு பதிலடி கொடுக்கிறது இந்த படம்.
படம் முழுதும், கல்வி, நீதி குறித்தே சொல்கிறது வேட்டையன்.
“பணம் உள்ளவனுக்கு ஒரு கல்வி. இல்லாதவனுக்கு வேறகல்வி.. ஆனா ஒரே பரீட்சை எப்படி நியாயம்..” எ
அனைவருக்கும் நீதி கிடைக்கணும் உரிய காலத்துல கிடைக்கணும்னு சொல்லகிறது படம்.
இதைத்தான் இந்த வீடியோவில் பேசி இருக்கிறேன். (லிங்க் முதல் கமெண்ட்டில்..)
சரி.. “மனு ப்ரியரான” ரஜினி இந்தப் படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்? ஏற்கெனவே காலா கபாலி படங்கள்ல ரஞ்சித் கருத்துக்களை வசனமாக பேசினார்.. இதைச் சொல்லி ஒருத்தர் கேள்வி கேட்டப்போது ரஞ்சித் கிண்டலாக சிரித்தார்..
இப்பவும் விவரம் தெரியாமல்தான் நடிக்க ரஜினி ஒத்துக்கிட்டாரா.. அடுத்த வீடியோவில் பேசுகிறேன்!
– டி.வி.சோமு
https://www.youtube.com/watch?v=6HxrSjE1n2I

