பவர் கிளப்பும் பீதி! புதுப்படத்துக்கு என்ன பெயர் தெரியுமா?

திருப்பதி லட்டு விவகாரம் முடிந்த பாடில்லை. இந்த நிலையில், புது பீதியை கிளப்புகிறார், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.
ஆம்… தான் இயக்கி நடிக்கும் படத்துக்கு, பவர் லட்டு என பெயர் வைத்து இருக்கிறார். படத்தை எல்.வி.கிரியேசன்ஸ் சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கின்றார். ( இவர் இதற்க்கு முன்னதாக பவர் ஸ்டார் நடித்த “முன்தினம்” படத்தை, தயாரித்து இயக்கி உள்ளார். அத்திரைப்படம் மிக விரைவில் வெளிவர உள்ளது.)
பவர் லட்டு படத்திற்கு கதை திரைக்கதை எழுதியது மனோஜ் கார்த்திக் காமராஜு. இவர் வைஜெயந்தி ஐ பி எஸ் , ப்ருஸ்ட்லீ ரிடர்ன்ஸ் படங்களை இயக்கியவர்.
வினோத் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள வசந்த் மோகன்ராஜ் இசை அமைக்கின்றார்.
இந்த படத்தை 2 எஸ் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் எஸ் வினோத் குமார் வெளியிட உள்ளார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தமிழ் திரைப்பட நகைச்சுவை ஜாம்பவான்களின் ஒருவரான நகைச்சுவை தென்றல் செந்தில் வெளியிட பவர் ஸ்டாரும் தயாரிப்பாளரும் பெற்று கொண்டனர்.
“லட்டு விவகாரம் ஓயாத நேரத்தில், படத்துக்கு பவர் லட்டு என பெயர் வைத்து இருக்கிறீர்களே” என்று கேட்டால், “2013 ல் கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து நடித்தேன். படம் பெரிய வெற்றி பெற்றது. அப்போது எந்த லட்டு பிரச்சினையும் இல்லையே! இந்த புதிய படமான பவர் லட்டுவும், காமெடியான ஜாலியான படமாக மக்களை கவரும்” என்றார்.
எப்படியோ, எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார், பவர்!
பி.ஆர்.ஓ.: மணி மதன்