கோலிவுட்டில் கால்பதிக்கும் ‘டிராமா கம்பனி’: சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் புதிய மெகா கூட்டணி!
தமிழ் சினிமாவிற்கு எப்போதுமே நல்ல கதைகளையும், தரமான பொழுதுபோக்கு படங்களையும் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனங்களை கொண்டாடுவது பிடிக்கும். அந்த வரிசையில், பெரிய கனவுகளோடும் லட்சியங்களோடும் கோலிவுட்டில் மாஸாக என்ட்ரி கொடுத்திருக்கிறது பாலமுருகன்.அ தலைமையிலான ‘டிராமா கம்பனி’ (Drama Company) தயாரிப்பு நிறுவனம்!
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற மெகா ஹிட் படத்தை இயக்கி, ‘வித் லவ்’ படம் மூலம் நடிகராகவும் ரசிகர்களின் மனதை வென்ற இளம் திறமைசாலி அபிஷன் ஜீவிந்த் ஆகிய இருவரும் இணைந்து முதன்மை கதாபாத்திரங்களில் மிரட்டப்போகிறார்கள். இவர்களுடன் ஜோடியாக ஷிவானி நாகாரம் கதாநாயகியாக களம் இறங்குகிறார்.
இந்தப் படத்தின் மூலம் கௌதம் சிவராமன் இயக்குநராக தமிழ் சினிமாவில் கால்பதிக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்துகொள்ள, பாரம்பரிய முறைப்படி பூஜையுடன் கூடிய துவக்க விழா சென்னையில் கோலாகலமாக அரங்கேறியது.
திரையுலகமே திரண்டு வந்த இந்த விழாவில், தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ், ’96’ மற்றும் ‘மெய்யழகன்’ இயக்குநர் சி. பிரேம்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ பட புகழ் நடிகர் மணிகண்டன், கென் கருணாஸ், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, ஆவுடையப்பன், நடிகர் ரிஷிகாந்த், பிரபு ராம் வியாஸ், மதன், கருப்பையா சி. ராம் எனப் பல முன்னணி பிரபலங்கள் நேரில் வந்து படக்குழுவினரை மனதார வாழ்த்தினர்.
இவர்களோடு ‘ஹார்ட்பீட்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் கவனம் ஈர்த்த யோகலட்சுமி, பிக் பாஸ் புகழ் கானா வினோத், சங்கீதா மாதவன், பெஞ்சமின் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள்.
டெக்னிக்கல் டீம்:
-
இசை: லியோன் ஜேம்ஸ்
-
ஒளிப்பதிவு: பிரகதீஷ் பிரபு
-
படத்தொகுப்பு: சுரேஷ்
-
ஆடை வடிவமைப்பு: சுவாதி ராமகிருஷ்ணன்
தற்போது இந்த படத்தின் விறுவிறுப்பான படப்பிடிப்பு சென்னையில் செம ஸ்பீடாக நடந்து வருகிறது. படத்தின் டைட்டில் மற்றும் அடுத்தடுத்த செம்ம அப்டேட்டுகளை டிராமா கம்பனி நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது. வெயிட்டிங் ஃபார் தி லோடிங்!

