சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ டீசர்: லயிக்க வைக்கும் இசை.. ரசிக்க வைக்கும் காட்சிகள்! 

சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ டீசர்: லயிக்க வைக்கும் இசை.. ரசிக்க வைக்கும் காட்சிகள்! 

சீனு ராமசாமி இயக்கியுள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனது.   விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் டாக்டர் டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் தயாரிக்கும்  இந்தப் படத்தில், யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்து உள்ளனர்.

அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், ஏகாதசி உட்பட பலர் பாடல்கள் எழுதியுள்ளனர். கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் தேனியைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி படம் திரைக்கு வருகிறது.இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டீசர் எப்படி இருக்கிறது?:

“இங்க ஓடுறவன் ஓடிட்டு தான்டா இருக்கணும். ஆனா வாழ்க்கையில யாருக்காக ஓட்றோம்னு தெரிஞ்சிக்கணும்ல, உனக்காக நீ எப்போ தாண்டா ஓடப்போற?” என்ற யோகிபாபுவின் பின்னணி குரலுடன் தொடங்குகிறது டீசரின் முதல் ஷாட் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

‘பயத்துல ஓட்றதுக்கும், அன்புல ஓட்றதுக்கும் வித்தியாசம் இருக்கு’ என நாயகன் மறுமொழி உதிர்க்க, கிராமத்தின் களம் விரிகிறது. என்.ஆர்.ரகுநந்தனின் பின்னணி இசை மனதை வருடுகிறது. இடையில் வரும் ப்ரேம்கள் ஈர்க்கின்றன. இடையில் வரும் சென்டிமென்ட் காட்சியும், யோகிபாபுவின் ரியாக்சனும் ரசிக்க வைக்கின்றன. இதன் மூலம் ‘நீர்ப்பறவை’க்குப் பிறகு சீனு ராமசாமி – என்.ஆர்.ரகுநந்தன் கூட்டணி கம்பேக் கொடுத்துள்ளது என்பதை உணர முடிகிறது.

. டீசர் வீடியோ:

 

 

Related Posts