வசூலை குவிக்கும் தங்கலான்! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று (ஆகஸ்ட் 15ஆம் தேதி) வெளியானது, தங்கலான். பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த ஆண்டு வெளிவந்த தமிழ் படங்களில் அதிகப்படியான முதல் நாள் வசூலைக் குவித்த படமாக தங்கலான் விளங்குகிறது. அதேபோல், விக்ரம் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையையும் பெற்று உள்ளது.
முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூபாய் 26.44 கோடிகளை வசூல் செய்துள்ளது. இது இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த தமிழ் படங்களின் முதல் நாள் வசூலை விடவும் அதிகம். அதேபோல் விக்ரம் நடிப்பில் வெளியான படத்தின் முதல் நாள் வசூலில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இது குறித்த தகவலைப் பகிர்ந்த விக்ரம், ” அளவிட முடியாத அன்புக்கு நன்றி. இதைவிட சிறப்பாக எதையும் கேட்க முடியாது. கோடி நன்றிகள்” என பதிவிட்டுள்ளார். மேலும் படக்குழுவினர் இந்தத் தகவலைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.