தனுஷின் ராயன்: அமேசான் ப்ரைம் ஓடிடியில்! எப்போது தெரியுமா?

தனுஷின் ராயன்: அமேசான் ப்ரைம் ஓடிடியில்! எப்போது தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்கி நடித்த  ராயன் திரைப்படம்,  கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் பிரம்மாண்ட வரவேற்பு பெற்றது. அண்ணன் – தம்பி – தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ராயன் திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்தது.

இந்த நிலையில், ராயன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி  அறிவிக்கப்பட்டு உள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ராயன் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக உள்ளது. இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஓடிடியில்  இப்படம், தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் வெளியாகிறது.

னுஷ் இயக்கிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, செல்வ ராகவன் உள்பட பலர் நடித்துள்ளனர்.