நிகழ்ச்சியில் தொகுப்பாளினியிடம் தவறாக நடந்துகொண்ட ராமர்!
மதுரையில் நேற்று ( 06.09.2024) முதல், புத்தகக்காட்சி துவங்கி உள்ளது. இதில் வரும் 14ஆம் தேதி ‘விஜய் தொலைக்காட்சி’ புகழ் இராமர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
‘தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கோமாளித்தனமான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இவரை, எப்படி புத்தக விழாவின் சிறப்பு விருந்தினராக அழைக்கலாம்; வேறு எழுத்தாளர்களை அழைக்கக்கூடாதா’ என்று பலரும் சமூகவலைதளத்தில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரம், ‘ராமர் புத்தகங்கள் படிப்பவர்தான்.. அவரை ஏன் அழைக்கக்கூடாது’ என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ராமர் குறித்து சர்ச்சையான விசயம் நினைவுக்கு வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன், விஜய் டி.வி.யில் ‘Oo Solriya Oo Oohm Solriya’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்குகினர். இதில் பல வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
ஒரு எபிசோடில், ராமர், அறந்தாங்கி நிஷா, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது நிகழ்ச்சி நடைபெற்று கொண்டியிருக்கும் சமயத்தில் ராமர் பேசிக்கொண்டே திடீரென பிரியங்கவிடம் சென்று மேலாடையில் கை வைத்தார். இதை மேடையில் இருந்தவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. விஜய் டிவியும், இதை நீக்காமல் ஒளிபரப்பியது. இந்த காட்சி இன்னும் யு டியுபில் இருக்கிறது.
ராமரின் செயலுக்கு அப்போதே ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அதே போல,
சில வாரங்களுக்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில ராமர் கலந்துகொண்டார். இன்னொரு பங்கேற்பாளரான, அன்ஷிதாவிடம், “கத்தியை கொடுடி தேவ… சீனா” என்று பேசி அதிரவைத்தார். அடுத்த வாரம், அன்ஷிதா, “வாயை மூடுடா சுண்…ணாம்பு” என டபுள் மீனிங்கள் பேசி பிபி ஏற்றினார்.
முகம் சுளிக்க வைக்கும் படியாக இருவரும் நடந்து கொண்டதை பலரும் கண்டித்தனர். .
இப்படி, நகைச்சுவை என்கிற பெயரில் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட ராமரை, புத்தக கண்காட்சியில் பேச அழைக்கலாமா என்கிற கேள்வியும் எழுகிறது.
– டி.வி.சோமு