கங்குவா டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் கங்குவா படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு அறிவித்து உள்ளது.
கங்குவா படத்தில் நாயகன் சூர்யாவுடன், திஷா பதானி, அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.
இதுவரை தமிழ்த் திரைப்படங்கள் செய்ய முடியாத சாதனையாக உள்ள 1000 கோடி ரூபாய் வசூலை சூர்யாவின் கங்குவா திரைப்படம் சாதிக்கும் என தனஞ்செயன் உள்ளிட்ட கங்குவா படக்குழுவினர் கூறி வருகின்றனர்.
கங்குவா படத்தின் கிளைமேக்ஸிலேயே கார்த்தி பாபி தியோலின் மகனாக வருவார் என்றும் 2ம் பாகத்துக்கான லீடாக அந்த காட்சி இருக்கும் என்றும் தகவல்கள் கசிந்து எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்துள்ளன.
கடந்த மார்ச் மாதம் கங்குவா டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ஆகஸ்ட் 12 ஆம் தேதி டிரெய்லர் வெளியாவதாக, படக்குழு அறிவித்து உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் உற்சாகத்தை சமூகவலைதளத்தில் ரசிகர்கள் பகிர்ந்துவருகிறார்கள்.