சூர்யாவின்‘கங்குவா’ ஃபர்ஸ்ட் சிங்கிள்… ரிலீஸ் எப்போது தெரியுமா?!

சூர்யாவின்‘கங்குவா’ ஃபர்ஸ்ட் சிங்கிள்… ரிலீஸ் எப்போது தெரியுமா?!

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நாயகநான நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திஷா பட்டாணி மற்றும் பாபி டியோல் லீட் ரோல்களில் நடித்துள்ளனர்.

வரலாற்று பின்னணியில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து

படத்தின் போஸ்டர்கள் மற்றும் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பதை எகிறவைத்தது. படத்தில் நடிகர் சூர்யா பத்து விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

வரலாற்று பின்னணியுடன் நிகழ்கால சம்பவங்களை இணைத்து வித்தியாசமான படைப்பை இயக்குனர் சிவா கங்குவா படம் மூலம் உருவாக்கி வருகிறார். இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், வரும் 23ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது. இது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது.