“அறிவி்ன் போராட்டத்திற்கான பதில்தான் ‘வள்ளியம்மா பேராண்டி’ ஆல்பத்தில் இருக்கும் 12 பாடல்களும்!”: பா.ரஞ்சித்

“அறிவி்ன் போராட்டத்திற்கான பதில்தான் ‘வள்ளியம்மா பேராண்டி’ ஆல்பத்தில் இருக்கும் 12 பாடல்களும்!”: பா.ரஞ்சித்

2020ம் வருடம் சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு- தீ இருவரது உருவாக்கத்தில் உருவான `என்ஜாயி எஞ்சாமி’ பாடல் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் அறிவின் ‘வள்ளியம்மா பேராண்டி’ எனும் சுயாதீன ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பா.இரஞ்சித், டி.இமான், அந்தோணி தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய பா.இரஞ்சித், “அறிவின் ‘கள்ளமெளனி’ பாடல் வெற்றிப் பாடலாக அமைந்தது. அதற்குப் பிறகு ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் மிகப்பெரிய வெற்றிப் பாடலாக அமைந்தது. அதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது சந்தோஷ் நாராயணின் தயாரிப்பும், தீ பாடியதும்தான். அறிவின் எழுத்து மிகச் சாதாரணமான எழுத்தில்லை. பல தலைமுறைகளின் குரலை, வடிவத்தைக் கொண்டது. ஒரு பெரிய அரசியலை வார்த்தைகளாக மாற்றி, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கொண்டு சென்றது அவரின் எழுத்து. அதற்குப் பின்னால் அவரின் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது.

ஆனால், ‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலால் அறிவுக்கு நிறையப் பிரச்னைகள் வந்தன. மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டான். ரொம்ப எமோஷனாலானவன். எளிதில் உடைந்துவிடுவான். அதனால், அதிலிருந்து வெளியே வர பெரும் மனம்போராட்டாத்தை எதிர்கொண்டான். அவனது அந்தப் போராட்டத்திற்கான பதில்தான் இந்த ‘வள்ளியம்மா பேராண்டி’ ஆல்பத்தில் இருக்கும் 12 பாடல்களும்!” என்றார்.

Related Posts