“ரஜினியின் கூலி படத்தில் நான்…!”: ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு!

“ரஜினியின் கூலி படத்தில் நான்…!”: ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடிக்கும் கூலி படத்தில் தான் நடிப்பதாக, நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து உள்ளார.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹாதராபாத்தில் துவங்கியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜூம், ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தில் பல வருடங்கள் கழித்து, ரஜினியுடன் சத்யராஜ் நடிக்கிறார். மேலும் பல பிரபல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

அனிருத் இசை அமைக்கும், இப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது.

இதற்கிடையே, நடிகை ஸ்ருதி ஹாசன் கூலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடிப்பதாக தகவல்கள் பரவியது. இந் நிலையில், தற்போது தான் இப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் தான் கலந்துகொண்டுள்ளதை ஸ்ருதி ஹாசன் தன் இன்ஸ்டா பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

Related Posts