“போயஸ் கார்டன் வீடு..”: ராயன் விழாவில் ‘தனுஷ்’ சொன்ன ரகசியம்!  

“போயஸ் கார்டன் வீடு..”: ராயன் விழாவில் ‘தனுஷ்’ சொன்ன ரகசியம்!  

நடிகர் தனுஷ், இயக்குநர், பாடகர் என பன்முகம் கொண்டவர். தமிழ் கடந்து பாலிவுட், ஹாலிவுட் நோக்கிச் செல்பவர். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர்.

அவரது திரை வாழ்க்கையில் குறை சொல்லவே முடியாது. ஆனால், தேவையின்றி தனிப்பட்ட முறையில் அவரை குற்றம் சொல்கிறார்கள் சில யு டியுபர்கள்.

“தனுஷுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரஜினிகாந்த் வீட்டில் மரியாதை கிடைக்கவில்லை. இந்த ஆதங்கத்தில்அவர் போயஸ் கார்டனில் வீடு கட்டினார்” என்று சில யு டியுபர்கள் பேசினர். மேலும்,  எந்த சினிமா பிரபலத்துக்கு விவாகரத்து என்றாலும், தனுஷை தொடர்பு படுத்தினர்.

இது போன்ற தேவையற்ற பேச்சுக்களை தனுஷ் கண்டுகொள்ளாமல் இருந்தார். அதே நேரம், அவரது நலம் விரும்பிகளும், ரசிகர்களும் தனுஷின் பதிலடியை எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ராயன் திரைப்பட விழாவில் இதற்கான பதிலை அளித்தார் தனுஷ்.

நிகழ்வில் அவர் பேசும்போது, “”நான் யாருன்னு எனக்குத் தெரியும், என்னை படைச்ச அந்த சிவனுக்குத் தெரியும், என் அப்பா, அம்மாவுக்குத் தெரியும், என் பசங்களுக்குத் தெரியும், என் ரசிகர்களுக்குத் தெரியும்” என தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.அடுத்து போயஸ் கார்டன் வீடு குறித்த விமர்சனத்துக்கு பதிலளித்தார். அவர்,  “தலைவர் ( ரஜினி) வீட்டை பார்க்க வேண்டும் என போயஸ் கார்டனுக்கு சென்றேன். போலீஸ் அண்ணன்கள் சிலர் இருந்தனர். அவர்களிடம் கேட்டதற்கு அங்க தான் இருக்கு சைலன்ட்டா பார்த்து விட்டு போயிடணும்னு சொன்னாங்க,

நானும் தலைவர் வீட்டை பார்த்து விட்டு சந்தோஷமாக திரும்பினேன்.  அங்கே இன்னொரு வீட்டுக்கு முன் ஜே ஜேன்னு கூட்டம். அது யாரு வீடுன்னு கேட்டதற்கு ஜெயலலிதாம்மா வீடுன்னு சொன்னாங்க, அப்படியே வியந்து போய் விட்டேன்.

இந்த பக்கம் ரஜினி சார் வீடு, அந்த பக்கம் ஜெயலலிதாம்மா வீடு நடுவில் நம்ம வீடு கட்டினா எப்படி இருக்கும் என்று நினைத்தேன்” என்றார் தனுஷ்.

அவரது பேச்சைக் கேட்டரசிகர்கள் கரகோசம் எழுப்பி, பெரும் ஆரவாரம் செய்து விட்டனர்.

 

Related Posts