பிரபல நடிகர் மரணம்..! கல்லறையில் கதறி அழுத ரசிகர்கள்..!

கொரோனா அச்சம் ஒருபுறம் இருக்க திரைப் பிரபலங்கள் மரணம் ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இன்று காலை மரணமடைந்த நடிகர் இர்பான் கானின் உடல் மும்பையில் இருக்கும் வெர்சோவாவில் அடக்கம் செய்யப்பட்டது.

பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர் இர்ஃபான் கான். நேற்று எதிர்பாரவிதமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உடனடியாக மும்பையில் இருக்கும் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை மருத்துவர்களால் கொடுக்கப்பட்டுவந்தது. பெருங்குடல் தொற்று காரணமாக உடல் நிலை மோசமானதாக தகவல் வெளியானது. மருத்துவர்களின் தொடர்கண்காணிப்பில் இருந்த இர்ஃபான் கான் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

அவரது மரணம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

மறைந்த இர்பான் கானுக்கு மனைவி சுபதா, மகன் பபில் கான், அயன் கான் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஊரடங்கு காரணமாக  கடசியாக அவரை பார்க்கமுடியாத நிலையில் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஊரடங்கு அமலில் இருப்பதால் பாலிவுட் பிரபலங்களான  மிக்கா சிங், கபில் ஷர்மா, விஷால் பரத்வாஜ் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.  அதிர்ச்சி அளிக்கும் மரணச் செய்தியால் ரசிகர்கள் ஏராளமானோர் கல்லறைக்கு முன்பும் நின்று கதறி அழுதனர்.

இர்ஃபான் உடல் அதிக போலீஸ் பாதிகாப்புடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.

Related Posts