‘சம்பராலா ஏடி கட்டு’: சாய் துர்கா தேஜின் வெறித்தனம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு !

‘சம்பராலா ஏடி கட்டு’: சாய் துர்கா தேஜின் வெறித்தனம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு !

திரையுலகில் தன் அதிரடி நடிப்பால் தனி முத்திரை பதித்த மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், மீண்டும் ஒரு பிரம்மாண்ட பான்-இந்தியா ஆக்சன் விருந்துடன் ரசிகர்களை அட்ரினலின் ரேஷிற்கு அழைத்து வரத் தயாராகிவிட்டார். அறிமுக இயக்குநர் ரோஹித் கே. பி. இயக்கத்தில், பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் ‘சம்பராலா ஏடி கட்டு – SYG’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி இணை தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

திரையரங்குகளில் தீப்பொறி பறக்க வைக்கும் வகையில் வெளியாகி உள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தீப்பிழம்புகளும் அடர் புகையும் சூழ்ந்த போர்க்களம் போன்ற பின்னணியில், உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன், கையில் ஆயுதம் ஏந்தி அச்சமின்றி நடந்து வரும் சாய் துர்கா தேஜின் கரடுமுரடான அவதாரம், படம் முழுவதும் அனல் பறக்கும் காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. ‘அசுர ஆகமன’ முன்னோட்டத்திற்குப் பிறகு, தற்போது இறுதிப் கட்டத் தொழில்நுட்பப் பணிகள் (போஸ்ட் புரொடக்ஷன்) முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் சாய் துர்கா தேஜுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ஜகபதி பாபு, சாய்குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகள்ள மற்றும் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் ஒருவர் முக்கிய வேடத்தில் களமிறங்குகின்றனர். வெற்றிவேல் பழனிச்சாமியின் ஒளிப்பதிவு, பி. அஜனீஷ் லோக்நாத்தின் அதிரடி இசை, பீட்டர் ஹெய்ன் மற்றும் ராம்-லக்ஷ்மன் மாஸ்டர்களின் மிரட்டலான சண்டைப் பயிற்சிகள் என மாஸ் கூட்டணி இணைந்துள்ளதால், இத்திரைப்படம் திரையரங்குகளில் ஒரு புதிய ஆக்சன் பேரனுபவத்தைப் படைப்பது உறுதி.

Related Posts