’’வலிமை’’ படத்துக்கு விளம்பரம் வேண்டாம் அஜித்..! போனி கபூர் அறிவிப்பு..!
போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் குறித்து தயாரிப்பாளார் அறிக்கை வெளியிட்டுள்ளர். அஜித் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் தலை என்று அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார். என் வீடு என் கணவர் 1990 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பள்ளி மாணவனாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து சினிமாவில் தனக்கு என்று தனி முத்திரையைப் பதித்து தலை என்று அன்போடு ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு உச்ச நடிகராக நிமிர்ந்து நிற்கிறார் அஜித்.
ஆடம்பரம், விளம்பரம், அலட்டல் இல்லாத எளிமையான நடிகராகவும் நேர்மை, மனிதராக வளம் வருகிறர். போனி கபூர் மற்றும் ஹெச். வினோத் கூட்டனியில் நேர்கொண்ட பார்வையைத் தொடர்ந்து வலிமை உருவாகிறது.
வலிமை;
இந்தப் படத்தின் நாயகியாக ஹியூமா குரோஷி நடிக்கிறார் என தகவல்கள் வெளியானது. இந்தப் படத்திதைப் பற்றிய செய்தி நாளை வரும். அதை சமூக வலைதளத்தில் அப்டேட் செய்து கலக்கத் திட்டம் போட்டு வைத்திருந்தனர் ரசிகர்கள். அஜித் பிறந்த நாளையொட்டி ஸ்பெஷல் அப்டேட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். உழைப்பாளர் தினமான நாளை அஜித் பிறந்த நாள் கொண்டாப்படுகிறது.
ரசிகர்கள் ‘வலிமை’ படம் குறித்த ஸ்பெஷல் அப்டேட் வெளியாகும் என காத்திருந்தனர். ஆனால் வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதுவரை தனித்திருப்போம், நம் நலம் காப்போம்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் ’வலிமை’ படத்திற்கு எந்த விளம்பரமும் தேவையில்லை என்று தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பது ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. ஏற்கனவே பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என காமன் டிபியை வெளியிடுவதற்கு ரசிகர்களுக்கு அஜித் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.