கொரோனா தொற்று பிரபல பாடகர் உயிரிழப்பு..!
உலகை அச்சுருத்தும் உயிர் கொல்லி கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த, பிரபல பாடகர் உயிரிழந்தார். உலக நாடுகள் இந்த வைரஸின் பிடியிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
சீனாவில் தொடங்கி அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை கொடுரமான தாக்கத்தினால் உயிர்பலி ஏற்படுத்தி அச்சுருத்தி வருகிறது.
அங்கு தினமும் ஆயிரக்கனக்கான உயிர்களைக் குடித்துக் கொண்டுவருகிறது. நாளுக்கு நாள் அதன் தாண்டவத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் தொற்றைக் கட்டுப் படுத்தும் ஆயுதமாக பல நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளது.
இந்த நோய் தொற்று பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் தாக்கி வருகிறது. இதில் ஹாலிவுட் பிரபலங்களும் பாதிக்கப் பட்டு வருகின்றனர். பல முன்னணி நடிகர், நடிகைகளையும் இந்த வைரஸ் தொற்று பாதிப்படையச் செய்கிறது.
இந்த கொடுரத்தின் பிடியில் சிக்கி மீளமுடியாமல் சில நடிகர், நடிகைகள் உயிரிழந்துள்ளனர்.
தற்போது பிரபல நற்செய்தி பாடகரான டிராய் ஸ்னீட் வயது 52 இந்த தொற்றின் காரணமாக உயிரிழந்திருக்கிறார். யூத் இவர் பார் கிறிஸ்ட், ஹையர், த ஸ்டரகில் இஸ் ஓவர் ஆகிய பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். த பிரீச்சர்ஸ் ஒய்ஃப் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
டிராய் ஸ்னீட் புளோரிடாவின் ஜாக்சன்விலேவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.