“அமரன்… ஆகச்சிறந்த படைப்பு!”: சீமான் நெகிழ்ச்சி
இந்திய ராணுவத்தில் பணி புரிந்து முகுந்த் வரதாரஜன், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார். அவரது வாழ்க்கை வரலாறு அமரன் திரைப்படமாக உருவாகி உள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து உள்ளார். சாய் பல்லவி நாயகியாக நடித்து உள்ளார்.
இப்படத்தைப் பார்த்த, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “அமரன் படம் மிகச் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, கடைசி இருபது நிமிட காட்சிகள், இதயத்தை இறுக பிடித்துவிட்டது. ஒரு முகுந்த் வரதராஜன்தான்… அவராக நடிக்க என் தம்பி சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. என் தம்பி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சிறப்பா இயக்கி இருக்கார். ஒரு சிறு குறையும் சொல்ல முடியாத படைப்பு!
சாய்பல்லவி சாதாரணமாகவே சிறப்பா நடிப்பாங்க.. இந்தப் படத்தில இன்னும் நெகிழ வைச்சுட்டாங்க! என் அண்ணன் கமல் தயாரித்த ஆகச் சிறந்த படைப்புள்ல ஒன்னு இது! இந்த நாட்டுக்கு இந்த நாட்டு ராணுவ வீரர்களுக்கு அவரோட அர்ப்பணிப்பாததான் பாக்கிறேன்” என்று சீமான் நெகிழ்ச்சியாக கூறினார்.
பிறகு, அமெரிக்காவில் இருக்கும் கமலிடம் அலைபேசினார். அப்போது, “அமரன் படம், இதயத்தைப் பிடிச்சி இழுத்திடுச்சு. அழுகாம நெகிழாம யாரும் வெளியில வர முடியாது. முகுந்த் வரதராஜனுக்கு கொடுத்த கவுரவம் இது” என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறினார்.
அந்த வீடியோ:
https://www.facebook.com/reportersomu/videos/1728405701248139