பாரிஸ் ஈபிள் கோபுரம் அருகில் புதுச்சேரி விடுதலை நாள் ஒன்று கூடல் நிகழ்ச்சி! பிரான்ஸ் பாண்டிச்சேரி சங்கங்கள் கூட்டமைப்பால் நடத்தப்பட்டது!
புதுச்சேரியை பிரான்சு அரசு 1/11/1954 இந்தியாவுடன் இணைத்தது. இதை, “புதுச்சேரி விடுதலை நாளாக “புதுவை அரசு தொடர்ந்து கோலாகலமாக கொண்டாடி வருகிறது.
இந்த நாளை ஒட்டி ” பிரான்சு பாண்டிச்சேரி சங்கங்கள் கூட்டமைப்பும் ” 3/11/2024 ஞாயிறு அன்று காலை 11.00 மணியளவில் பாரீஸ் நகரில் கொண்டாடியது.உலக அதிசியங்களில் ஒன்றான பாரிஸ் ஈபிள் கோபுரம் அருகில் உள்ள பிரான்சு மனித உரிமை சதுக்கத்தில் புதுச்சேரி விடுதலை நாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி பிரான்ஸ் பாண்டிச்சேரி சங்கங்கள் கூட்டமைப்பால் நடத்தப்பட்டது! கூட்டமைப்பின் தலைவர் முருகு பத்மநாபன் தலைமையில் செயலாளர் ஜெரார் மோரிஸ், பொருளாளர் ரமணி பூபதி, துணைச் செயலாளர் பிரபுராம் ஆகியோர் முன்னிலையில் பிரான்சு இந்திய சங்கங்கள் கூட்டமைப்பு தலைவரும் பிரான்சு தமிழ்ச் சங்க தலைவருமான தசரதன் அவர்கள் புதுச்சேரி விடுதலை பற்றி விளக்கவுரை ஆற்றினார்.நிகழ்வில் அனைத்து சங்க தலைவர்கள் நண்பர்கள் திராளக கலந்துகொண்டனர். திருவாளர்கள் தம்புசாமி, பச்சையப்பன், தெய்வபிராகசம், ஜக்கிரிய, குமணன், ஸ்ரீபாபு தனது துணைவியாருடனும், ஹோஷ் இராமலிங்கம், செந்தில் பிரபு, மீனாட்சி சுந்தரம், குமார், நாகராஜ், பாபுஜி, சவுந்தர், ஜெயன்தன், பாலகந்தன், விஜயகுமார், செழியன்,ஞானராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கடும் குளிர் காலத்திலும் சிறப்புற விழா நடந்தது.