‘அமரன்’ சாதி சர்ச்சை: காரணத்தைச் சொன்ன இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!

‘அமரன்’  சாதி சர்ச்சை: காரணத்தைச் சொன்ன இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!

காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு அமரன் என்கிற திரைப்படமாக உருவாகி உள்ளது.  ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உள்ளார்.

இப்படம் வெளியாகி  வசூலை குவித்து கொண்டிருக்கிறது. அதே நேரம் த்தில் ஒரு சர்ச்சையு\ிலும் சிக்கியது.

‘ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன், பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். படத்தில் அது மறைக்கப்பட்டுவிட்டது’ என தமிழ் இந்து நாளிதழ் உள்ளிட்ட சில ஊடகங்களில் செய்தி வெளியானது.  சமூக ஊடகங்களிலும் சிலர் இந்த பிரச்சினையை கிளப்பினர். நடிகை கஸ்தூரி உள்ளிட்ட சிலரும் இதே கருத்தை வெளிப்படுத்தினர்.இந்நிலையில் அமரன் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இயக்குனர் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

“முகுந்த் வரதராஜனை இநதியன் –  தமிழன் என்கிற அடையாளத்தோடு மட்டுமே காட்ட வேண்டும் என அவரது பெற்றோரும், மனைவியும்  கேட்டுக்கொண்டனர்.  தமிழ் roots கொண்ட ஒரு நடிகரை தான் முகுந்த் ஆக நடிக்க வைக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். அதனால் தான் சிவகார்த்திகேயனை தேர்வு செய்தேன்.

படத்தில் முகுந்த் கதாபாத்திரம், தனது தந்தையை நைனா என்று அழைப்பதும் சர்ச்சையாகி உள்ளது. நிஜத்திலேயே முகுந்த் வரதராஜன் அப்படித்தான் அழைப்பார்”என்று கூறினார்.

இதன் மூலம் வீண் சர்ச்சையை கிளப்பியவர்களின் மூக்கை உடைத்துள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.