நடிகர் சத்யராஜூம் பா.ஜ.க.வில் இணைகிறார்?

டிகை குஷ்பு, பா.ஜ.க.வில் இணைந்துள்ள நிலையில், நடிகர் சத்யராஜூம் அக்கட்சியில் இணைய இருப்பதாக ஒரு தகவல் உலவுகிறது.
 
பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துவந்த குஷ்பு, கடந்த 2012ம் ஆண்டு, தி.மு.க.வில் இணைந்து தனது அரசியல் வாழ்வை துவக்கினார். பிறகு அங்கு கருத்து வேறுபாடு ஏற்படவே, காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.
 
அங்கு அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் பதவி அளிக்கப்பட்டது. இந்நலையில், கடந்த சில தினங்களாக டுவிட்டரில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து பதிவிட்டார். அதுபோல் உள்துறை மந்திரி அமீத்ஷா மருத்துவமனையில் இருந்த போது நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
 
இதையடுத்து அவர், பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக கூறப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி சென்றுவிட்டு வந்த நடிகை குஷ்பு திடீரென மீண்டும் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு டெல்லி செல்ல சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார்.
நம்பி நாராயணன் பதிவு..
அப்போது அவரிடம் நீங்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வருகிறதே.. உண்மையா என்று கேட்டதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார். மேலும் அவரிடம் நீங்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நீடிக்கிறீர்களா என்று கேட்டதற்கு நோ காமண்ட்ஸ். கருத்து கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டு சென்றார்.
 
இந்நிலையில் நேற்று, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த குஷ்பூ, பா.ஜ.க.வில் இணைந்தார்.
இது தற்போது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
பெரியார் படத்தில் குஷ்பு, மணியம்மையாக நடித்தார். அந்த படத்தை வெளியிட்டு, “மணியம்மையே பாஜகவில் சேர்ந்துவிட்டார்” என்று கிண்டலாக பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
 
இந்நிலையில், நடிகர் சத்யராஜூம், பாஜகவில் இணைய இருப்பதாக ஒரு தகவல் உலாவருகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், பா.ஜ.க. முக்கிய பிரமுகரும், தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ இதழான ஒரே நாடு பத்திரிகியையின் ஆசிரியருமான நம்பி நாராயணன், தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
பெரியார் படத்தில் சத்யராஜ், குஷ்பு தோன்றும் படத்தை வெளியிட்டுள்ள அவர், “பெண்ணியம்_வென்றது! சினிமா_பெரியாரின்_மனைவி_பாஜகவில்! விரைவில் சினிமா பெரியாரும் வருகிறாராம்!!!” என்று பதிவிட்டுள்ளார்.
 
குஷ்புவைப் போலவே, பெண்ணியம், பகுத்தறவு என பேசி வருபவர் சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. பல மேடைகளில் வெளிப்படையாகவே, பெரியார் கொள்கைகளை ஆதரித்து பேசியவர் அவர்.
 
அவர் பாஜகவில் சேரப்போகிறார் என்று உலவும் தகவல், அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இது குறித்து சத்யராஜை தொடர்பு கொண்ட போது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.
 
அவருக்கு நெருக்கமானவர்கள், “எங்களுக்குத் தெரிந்தவரை சத்யராஜ், எப்போதும் நேரடி அரசியலுக்கு வரமாட்டார்!” என்று சுருக்கமாக தெரிவித்தனர்.
 

Related Posts