அக்., 17 : மக்களின் ஜனநாயகப் புரட்சியே அ.தி.மு.க.! மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி

அக்., 17 : மக்களின் ஜனநாயகப் புரட்சியே அ.தி.மு.க.! மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி

தமிழக அரசியல் வரலாற்றில், அக்டோபர் 17-ந்தேதியை மக்களின் ஜனநாயக புரட்சி நாள் என்றே குறிப்பிட வேண்டும். ஏனென்றால், இந்தியாவிலேயே லஞ்சம், ஊழல் மற்றும் குடும்பவாரிய அரசியலை எதிர்த்து பொது மக்களால், தொண்டர்களால், ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஒரே அரசியல் இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான் என்பதை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.

1971-க்கு பிறகுதான்கருணாநிதியின் ஊழல் ஆட்சியை காமராஜர் கடுமையாக விமர்சித்தார். அப்போது கருணாநிதி கட்சியை தன்வசப்படுத்துவதற்கு எம்.ஜி.ஆரைத் கட்டியடித்ததுடன், எம்.ஜி.ஆர். மன்றங்களை மு.க.முத்து மன்றங்களாக மாற்றினார்.

இதனால் ஆத்திரமடைந்த என்னைப் போன்ற எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றத்தினர் 1972 அக்டோபர் 1-ந்தேதி ஆலோசனைக்கூட்டம் நடத்தினோம். அந்தக்கூட்டத்தில், ‘தாய்க்கழகமே முக்கியம், தனிக்கொடி தேவையில்லை’ என்று பேசிய எம்.ஜி.ஆரின் காரை மறித்து, தி.மு.க.வின் சூழ்ச்சிகளை அம்மாப்படுத்தினேன். நான் கூறியவை எல்லாம் உண்மையென்று உறுதிப்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆர்., அக்டோபர் 8-ந்தேதி கணக்கு கேட்டார்.

புதிய கட்சி

இதையடுத்து, அக்டோபர் 10-ந்தேதி தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார். இந்த செய்தி காட்டுதீயாக பரவியதும், தமிழகம் முழுக்க எம்.ஜி.ஆருக்காக பொதுமக்கள் இரண்டாம் சுதந்திரப்போர் போன்று ஆவேசமாக போராடினார்கள்.

துயரத்தை தாங்கமுடியாமல் சிலர் விஷம் குடிப்தும், தீக்குளித்தும் தற்கொலை செய்தார்கள். எம்.ஜி.ஆர். வாழ்க என்று எழுதப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

மக்களை முன்வந்து நடத்திய கடையடைப்பு, உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தை முறைப்படுத்த அனாகபுத்தூர் ராமலிங்கம் தலைமையில் அமைதிக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், போராட்டம் முடியவில்லலை.

எம்.ஜி.ஆர். புதிய கட்சி தொடங்கவேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் ஒரே கோரிக்கையாக இருந்தது. அதனால், மக்கள் விருப்பப்படி புதிய கட்சிக்கு தலைமை ஏற்க எம்.ஜி.ஆர். சம்மதித்தார்.

பொய் வழக்குகள்

அப்போது மக்களை சந்தித்த எம்.ஜி.ஆர்., “என் மீது அன்பு கொண்ட உடமை தோழர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி கண்டுளறினேன், துடித்தேன். என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்காக தீக்குளிப்பு போன்ற உயிர்த்தியாக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், என்னை தீவைத்து கொன்றுவிட்டு, அதன்பிறகு தங்களுக்கு விருப்பமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று அண்ணாவிடம் மீது ஆணையாக கேட்டுக்கொள்கிறேன். எந்தவிதமான தற்கொலை முயற்சியிலும் ஈடுபடாதீர்கள், அது கோழைத்தனம்” என்று உருக்கமாக பேசினார்.

மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அனாகபுத்தூர் ராமலிங்கம் பதிவிசெய்த, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” எம்.ஜி.ஆர் கட்சியாக அக்டோபர் 17-ந்தேதி அறிவிக்கப்பட்டது. முதல் வாரத்திலேயே 11 லட்சம் பேர் உறுப்பினர்களான சாதனை நிகழ்ந்தது. அதனால் ஆங்காங்கே கட்சியினர் மீது பொய்வழக்குகள் போடப்பட்டன. எம்ஜிதும் 17 பொய் வழக்குகள் போடப்பட்டன.

சபதமேற்போம்

அதி.மு.க.வில் எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கு அதிக அதிகாரம் கொடுத்துத் தந்தார். பொதுச்செயலாளர் முதல் கிளைக் கழகச் செயலாளர்கள் வரை தொண்டர்களால் வாக்களித்து வெற்றி பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும் என்ற ஜனநாயக விதியை அறிமுகப்படுத்தினார்கள்.

அந்த விதியின்படி முதன்முதலாக நடந்த 1980 உட்கட்சித் தேர்தலில் கடும் போட்டி நிலவியது. தொண்டர்களின் ஆதரவு பெற்றவர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். ஆனால், தமிழ்நாட்டிலேயே சைதாப்பேட்டை தொகுதிசெயலாளர் தேர்தலில், நான் மட்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதற்காக எம்.ஜி.ஆர். என்னை நேரில் அழைத்து பாராட்டினார். எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கியதற்கு தமிழகமே போர்க்கோலம் பூண்டதும், பலர் உயிர் துறந்ததும், மக்கள் வேண்டுகோளுக்காக அ.தி.மு.க. உருவானதும் வரலாறு காணாத புரட்சி. இன்றும் எம்.ஜி.ஆரை குலதெய்வமாக வணங்கும் மக்கள் இருக்கிறார்கள். வாழையடிவாழையாக அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் குடும்பங்கள் உள்ளன.

தி.மு.க.வை அரசியலில் இருந்தே அகற்றுவதற்கான சரியான சூழல் இப்போது அமைந்துவிட்டது. பிரிந்து நிற்கும் அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றிணைந்து, சரியான கூட்டணி அமைத்து திசயக்தி தி.மு.க.வை வோடு அழிக்கும் எம்.ஜி.ஆரின் லட்சியத்தை நிறைவேற்ற இந்நாளில் சபதமேற்போம்