“கேப்டன் மகன் என்கிற பெருமையே போதும்!”: மேடையிலேயே கண்ணீர்விட்ட விஜய பிரபாகரன்! 

“கேப்டன் மகன் என்கிற பெருமையே போதும்!”: மேடையிலேயே கண்ணீர்விட்ட விஜய பிரபாகரன்! 

விஜயகாந்த்  நடித்த நூறாவது படமான, ‘கேப்டன் பிரபாகரன்’   தமிழ் திரையுலகி  எவர்கின் மூவிகளில் ஒன்று.

ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆர்கே செல்வமணி இயக்க, விஜயகாந்த் நடித்த நூறாவது படமான இது, பெரும் வெற்றி பெற்றது.  . இந்த திரைப்படத்தில் சரத்குமார் மன்சூர் அலிகான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாசமுள்ள பாண்டியரே என்கிற பாடலும், ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பாடலாக உள்ளன. குறிப்பாக ஆட்டமா தேரோட்டமா பாடலுக்கு ரம்யா கிருஷ்ணன் ஆடிய ஆட்டத்தை இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். திரைப்படம் வரும் 22ஆம் தேதி புதிய தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.இதையொட்டி நடந்த பிரம்மாண்டமான நிகழ்வில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர்..

“இந்த கேப்டன் பிரபாகரன்,அப்பாவின் நூறாவது திரைப்படம். ஆனால்,  அவர் இறந்த பிறகு ரீ ரிலீஸாகும் முதல் திரைப்படமாக அனைவரும் கொண்டாட வேண்டும்.

அப்பா இதுவரை 156 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இதே போல அவர் நடித்த திரைப்படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் ஆக வேண்டும். அவை,   இளம் தலைமுறையினருக்கும், பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்.

எனக்கு விஜய பிரபாகரன் என பெயர் வைத்ததற்கு முக்கிய காரணமே இந்த திரைப்படம் தான்.  இந்த படம் எடுக்கும் போது தான், நான் பிறந்தேன். அதேபோல விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நினைவாக அப்பா எனக்கு இந்த பெயரை வைத்ததாக பலமுறை என்னிடம் சொல்லி இருக்கிறார்.

அப்போது அவர், “இந்த பெயரை வைத்ததற்கான அர்த்தம் எப்போது உனக்கு புரியாது, ஆனால், நான் இல்லாத போதும் இந்த பெயர் உன்னை உயர்த்தும்” என்று சொல்வார். அதற்கான காரணம் என்ன எனக்கு இப்போதுதான் புரிகிறது.

எனக்கு எம்பி பதவி எல்லாம் முக்கியமே இல்லை. கடைசி வரை விஜயகாந்த் மகன் என்கின்ற பெருமை மட்டுமே  போதும். மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழகக்கூடாது என்று கட்டுப்பாட்டுடன் இருந்தேன். ஆனால், முடியவில்லை.

இந்த உலகத்தில் நான் இருக்கும் கடைசி நிமிஷம் வரைக்கும் என்னுடைய அப்பாவை நினைத்துக் கொண்டே   இருப்பேன். தினமும் அவரை நினைத்து நான் அழுது கொண்டே தான் இருக்கிறேன்.  அதை பெருமையாகவே  நினைக்கிறேன்.

தோல்வியால், சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டு விட்டதை நினைத்து நான் அழவில்லை. எங்க அப்பாவை நினைத்து தான் அழுகிறேன். அப்பாவை நான் மிகவும் மிஸ் பண்றேன், அப்பாவின் வாழ்த்து இந்த படத்திற்கு நிச்சயம் இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் விஜய பிரபாகரன்.

Related Posts