இந்துக்களை புண்படுத்துவதா? விஜய் ஆண்டனி படத்துக்கு எதிர்ப்பு!

இந்துக்களை புண்படுத்துவதா? விஜய் ஆண்டனி படத்துக்கு எதிர்ப்பு!

‘பிச்சைக்காரன் 2’, ‘கொலை’ படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். ‘ரோமியோ’  என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். யூடியூப்பில் ‘காதல் டிஸ்டன்ஸிங்’ என்ற தொடரை இயக்கிய இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் படத்தை இயக்குகிறார்.

 

பரத் தனசேகர் இசையமைக்கும் படத்தின் படப்பிடிப்பு மலேசியா, பாங்காக், ஹைதராபாத், பெங்களூர், தென்காசி மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது.

 

இப்படத்துக்கான போஸ்டரில், முதலிரவு போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளையான விஜய் ஆண்டனி அப்பாவியாக அமர்ந்திருக்க, மணப்பெண்  மிருணாளினி மதுவை கோப்பையில் ஊற்றுவது போல் காட்சி உள்ளது.

இதற்கு, நெட்டிசன்கள் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

 

“இந்துக்களைப் பொறுத்தவரை,  திருமணமான தம்பதிக்கு முதலிரவு என்பது தாம்பத்ய வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. இதை கொச்சைப் படுத்துவது போல காட்சி அமைக்கலாமா” என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Posts