தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் குரலில் வீரநகரம்.

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் குரலில் வீரநகரம்.

அன்னை வேளாங்கண்ணி மாதா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வினோத்குமார் அவர்கள் இயக்கி நடித்த “வீரநகரம்” திரைப்படத்திற்கு முகேஷ் முனுசாமி இசையில் “தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் குத்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். சலிம் திரைப்படத்தில் இடம்பெற்ற “மஸ்காரா போட்டு மயக்குறியே” பாடலில் நடனமாடிய அஸ்மிதா இப்பாடலுக்கு நடனமாடவுள்ளார்.

இந்த பாடலில் நூற்றுக்கணக்கான நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் மிக பிரமாண்டமாக இப்பாடலை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனரும் கதாநாயகனுமான வினோத்குமார் தெரிவித்தார் இத்திரைப்படத்தில் நான்கு வில்லன்கள் நடித்துள்ளனர் முக்கிய வில்லனாக மைக்கேல்ராஜ் அவர்கள் நடித்துள்ளார். வில்லன் நடிகர் சாய்தீனா அவர்கள் சுவாரசியமான காட்சியில் நடிக்கவுள்ளார்.

கதாநாயகியாக சாராமோனு & ரோஸ்‌ நடித்துள்ளனர் காமெடியில் லொள்ளு சபா மனோகர் மற்றும் திருப்பாச்சி பெஞ்சமின் கலக்க முக்கிய கதாபாத்திரத்தில் சுப்ரமணியபுரம் டும்கான் மாரி விஸ்வாசம் சிட்டுக்குருவி பாட்டி ஈரோடு சேகர் விஜய் சங்கர் லட்சுமணன் ஆகியோர் நடித்துள்ளனர்

இப்படத்தின் First Look Poster-ஐ திரைப்பட ஜாம்பவான் டி.ராஜேந்தர், திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிட்டனர். இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் & ஆடியோ வெளியீடு விரைவில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் மிகப் பிரமாண்டமாக நடைபெறும் என்பதை இயக்குனரும் கதாநாயகனுமான வினோத்குமார் தெரிவித்தார்.

ஒளிப்பதிவு விஜய் வெங்கட்

எடிட்டிங் ரத்தினம் பாலாஜி

பாடல்கள் திருண்சூர்யா

வடிவம் திராவிடநேசன்

ஒப்பனை நந்தினி நடனம் நவீன்குமார் ஹரி

PRO P.மணிகண்டன்

Related Posts