வீர தீர சூரன்: விமர்சனம்
‘சித்தா’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த அருண்குமார் இயக்கத்தில், விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுஷாரா ஊள்ளிட்டோர் நடித்து, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம், வீர தீர சூரன். முதலில் வருவது இரண்டாம் பாகம், அடுத்துதான் முதல் பாகம் என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாம் பாகம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை பார்ப்போம்.
எஸ் ஜே சூர்யா போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். அவர் தாதா ரவி மற்றும் அவர் மகன் கண்ணனை எப்படியாவது என்கவுண்டர் செய்ய ப்ளான் போடுகிறார்.
இதை தெரிந்து கொண்ட இருவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விக்ரமிடம் செல்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ளும் விக்ரம் அவர்களை காப்பாற்றினாரா, விக்ரம் எதற்காக இதற்கு சம்மதித்தார், எஸ் ஜே சூர்யாவின் இந்த கோபத்திற்கு என்ன காரணம், இவர்களுக்கு இடையே இருக்கும் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது படம்.
முதல் பாதியின் தொடக்கத்திலிருந்து திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். அதேபோல் கதாபாத்திரங்களையும் சரியாக வடிவமைத்துள்ளார்.
அதற்கு பெரும்பலமாக இருக்கிறார் விக்ரம். ஆக்சன் காட்சியில் தொடங்கி ஒவ்வொன்றிலும் வழக்கம் போல மிரட்டல் நடிப்பை கொடுத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக எஸ் ஜே சூர்யாவை வித்தியாசமான ஒரு நடிப்பில் பார்க்க முடிகிறது.
வழக்கமான ஸ்டைல் இல்லாமல் இருப்பதே புதுமையாக இருக்கிறது. அதேபோல் நாயகி துஷாரா விக்ரமை கட்டுப்படுத்தும் மனைவியாக துணிச்சலான நடிப்பை கொடுத்துள்ளார்.
மலையாள நடிகர் சுராஜ் கதாபாத்திரமும் சிறப்பு. இன்னும் கூடுதல் காட்சிகளை கொடுத்திருக்கலாம். அடுத்தடுத்து தமிழ் படங்களில் இவரை கட்டாயம் பார்க்கலாம்.
இவர்களுக்கு அடுத்ததாக ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பெரும் பிளஸ் ஆக இருக்கிறது. அதேபோல் ஒளிப்பதிவு இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் காட்சியின் சிங்கிள் ஷாட் என ஒவ்வொன்றும் சிலிர்க்க வைத்துள்ளது.
ஒரு இரவில் நடக்கும் கதை, படம் முழுவதும் கிளைமாக்ஸ் காட்சிகள் போலவே இருந்தது, முதல் பாதியில் S. J. Suirya நடிப்பு நன்றாக இருந்தது.விக்ரம் உடம்பு அட்டகாசமாக வைத்துள்ளார், இரண்டாம் பாதியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் சீன் வரும் தியேட்டர் மொத்தமும் ரகளைதான்.
படத்தின் ஒளிப்பதிவு மிக இயல்பாக இருந்தது (தேனி ஈஸ்வர்) ஒரு காட்சியில் கூட ஒளிப்பதிவு துருத்திக் கொள்ளவில்லை.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அந்த பாடல் வரும் போது தியேட்டரில் விசில் சத்தம், மக்கள் ஆரவாரம் செய்வது பார்கவே சந்தோஷமாக இருந்தது, பாடலை முழுமையாக பயன்படுத்தி இருக்கலாம்.
பரபரப்பாக காட்சிகள் இருக்கும், எங்கும் தொய்வு இல்லாமல் திரைக்கதை நகர்கிறது, படம் வித்யாசமாகவே இருந்தது
படத்தின் கிளைமாக்ஸ் நன்றாக இருந்தது ஆனாலும் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக எடுத்து இருந்தால் மிக சிறப்பான கிளைமாக்ஸ் கிடைத்து இருக்கும் .
ஆக மொத்தம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தூள் சியான் விக்ரமின் சம்பவம் செமையாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.8/5
