பத்திரிகையாளரை கையைப் பிடித்து இழுத்த நடிகை!
கவர்ச்சி நடிகை ஒருவர், தன்னிடம் பாலியல் ரீதியாக அணுகியதாக பத்திரிகையாளர் டி.வி.சோமு தெரிவித்து உள்ளார்.
சில நாட்களுக்கு முன், பாடகி சுசிச்தார யு டியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நான் பாடிய ‘மே மாசம் 98’ -ல் பாடல் வெளியான பிறகு, கவிஞர் வைரமுத்து எனக்கு போன் செய்தார். ‘உங்கள் வாய்ஸை கேட்டு நான் பைத்தியமாகி விட்டேன். உங்கள் வாய்ஸ் மீது ஒரு காதல் ஏற்படுகிறது. உங்கள் வாய்ஸில் ஒரு காமம் தெரிகிறது’ என்றார்.
அது ஒரு கேவலமான பாட்டு என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் டிவி பார்த்தால் அதில் நடித்திருந்த ரீமாசன் மீது வேண்டுமென்றால் உங்களுக்கு அப்படியான ஒரு எண்ணம் வரலாம். உண்மையில், அந்த பாடலை நான் மிகவும் பதற்றத்தில் தான் பாடினேன். அப்படிப்பட்ட ஒரு பாட்டுக்கு இவர் இப்படியான ஒரு கமெண்டை கொடுக்கும்பொழுது, அங்கேயே ஏதோ தவறாக இருக்கிறது என்பதை நன்றாக உணர்ந்தேன்.
வைரமுத்து தொடர்ந்து, ‘நீ என் வீட்டிற்கு வா; உனக்கு பரிசு கொடுக்க வேண்டும்’ என்றார்.
என்னுடைய பாட்டியை என்னுடன் அழைத்துக்கொண்டு, அவரது வீட்டுக்குச் சென்றேன். என்னை பார்த்த அவர், ‘நீங்கள் தனியாக வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்’ என்றார். அந்த சந்திப்பில், என்னுடைய பாட்டி தான் அவரிடம் அதிகமாக பேசிக் கொண்டிருந்தார்.
‘நீங்கள் தான் இந்த குழந்தையை வளர்க்க வேண்டும், நீங்கள் தான் பொறுப்பாக இருக்க வேண்டும், நீங்கள் சுசிக்கு ஒரு தந்தை போல’ என்று பாட்டி, பேசப்பேச.. வைரமுத்துவிற்கு வியர்த்து கொட்டி விட்டது.

உண்மையில் அவர் என்னை தொடுவதற்காக தான் அழைத்து இருந்தார். இறுதியாக என்னுடைய பாட்டி பரிசு ஏதோ கொடுக்கிறீர்கள் என்று சொன்னார்களே என்று சொல்ல, பதட்டத்தில் பின்னாடி சென்ற அவர், ஷாம்பு பாட்டில்களை எடுத்து பரிசாக கொடுத்தார்” என்று பேசினார் சுசித்ரா.
இது குறித்து பத்திரிகையாளர் டி.வி.சோமு, தனது முகநூல் பக்கத்தில், ‘மீ டூ’ என்ற தலைப்பில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:
“இருபத்தியைந்து வருடங்கள் முன்…
வார இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டு இருந்தேன்.
பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் பேட்டிள், சமூக பிரச்சினை குறித்த கட்டுரைகள் எழுதுவதே வழக்கம். அரிதாக திரைப்பட பேட்டிகள் எடுப்பது உண்டு.
‘வித்தியாசமான’ ஐடியா எல்லாம் எனக்கு வரும்(!)
ஓய்வு பெற்ற கவர்ச்சி நடிகை ஒருவரை பேட்டி காண, முடிவு செய்து, தொலைபேசினேன்.
நேரம் சொன்னார்.
வீட்டுக்குச் சென்றேன்.
பெரிய வீடு. அவர் மட்டுமே இருந்தார்.
பேட்டிக்காச் செல்லும்போது, இயல்பாக பேச ஆரம்பித்து விடுவேன். அவரும், ஈடு கொடுத்து பேச ஆரம்பித்தார்.
பிறகு பேட்டி…
முடிந்ததும், “கொஞ்சம் இருங்க.. இன்னைக்கும் எனக்கு எப்படி எல்லாம் லெட்டர் எழுதறாங்கனு பாருங்க..” என்றார்.
நானும், “கண்ணே மணியே” என எழுதி இருப்பார்கள்.. சம்பந்தப்பட்டவர்களின் பெயரைத் தவிர்த்துவிட்டு பிரசுரிக்கலாமே… காமெடியாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.
ஓடிப்போய், கத்தையாக கடிதங்களை எடுத்து வந்தார் நடிகை.
சிலவற்றை அள்ளி என்னிடம் கொடுத்தார்.
ஒரு கடிதத்தை எடுத்துப் படித்தேன்.
அய்யோ… அத்தனை கொச்சையான வார்த்தைகள்.
நான் அதிர்ந்துபோய் அவரைப் பார்க்க, அந்த நடிகையின் கண்களில் பெருமிதமும், இன்னொன்றும் தென்பட்டது.
நான் பதறிப்போய், “சரிங்க, நான் கிளம்பறேன்.. பேட்டி கொடுத்ததுக்கு நன்றி” என்று பதட்டமாய் சொல்லி, அவசரமாய் எழுந்தேன்.
சட்டென என் கையைப் பிடித்து என்னை இழுத்து சோபாவில் உட்காரவைத்தவர், நெருங்கி அமர்ந்தார். பட்டென என் தோளில் கை போட்டார்.
“என்ன அவசரம்…” என்றார் சிணுங்கிய குரலில்.
நான் வலுக்கட்டாயமாக என்னை விடுவித்துக்கொண்டு, விறுவிறுவென வந்துவிட்டேன்.
அன்று முழுதும் படபடப்பு இருந்தது.

பிறகு நெருங்கிய நண்பர்களிடம் இது குறித்துச் சொல்லி என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். அதில் ஒரு நண்பர், “அந்த நடிகை ஓகோனு இருந்தப்போ ரொம்ப பிஸியா இருந்தார். இப்போ தனிமையில் இருக்கிறார். அதான் அப்படி நடந்திருப்பார்” என்றார்.
காலப்போக்கில் அந்த விசயத்தை மறந்துவிட்டேன்.
சில வருடங்களுக்கு முன், ‘மீ டூ’ என பல பெண்கள், சில சம்பவங்களை வெளிப்படுத்தியபோது, ‘நமக்கு நேர்ந்ததையும் எழுதலாமே’ என யோசித்தேன்.
‘அட… எதுக்கு இது’ என விட்டுவிட்டேன்.
தற்போது,ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பிறகு, மீண்டும் ‘மீடு’ புகார்களை சினிமா பெண்கள் சிலர் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.
“பலப்பல வருசங்களுக்கு முன்னால…” என்று ஆரம்பிக்கிறார்கள்.
அந்த நடிகை மீது எனக்கு புகார் எல்லாம் இல்லை. அவர் விரும்பினார்.. எனக்கு விருப்பமில்லை. அவ்வளவுதான். ஆகவே பெரிதுபடுத்தவில்லை.
ஆனால் இப்போது பேசும் நடிகை, பாடகி சுசித்ரா, “கவிஞர் வைரமுத்து என் குரலில் காமம் இருக்கிறது என தொலைபேசினார். பரிசு அளிப்பதாக நேரில் வரச் சொன்னார். பாட்டியுடன் சென்றேன்.. பரிசு எல்லாம் வைத்திருக்கவில்லை. வீட்டில் இருந்த ஷாம்பு பாட்டிலை கொண்டுவந்து பரிசு என கொடுத்தார்” என சொல்லி இருக்கிறார்.
சுசித்ரா சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.
என்னை அந்த நடிகை கையைப் பிடித்து இழுத்ததுபோல, வைரமுத்து இழுக்கவில்லை.
தவிர, 2003 நடந்ததை இருபத்தியோரு வருடங்கள் கழித்துச் சொல்வது ஏன்?
‘அந்தப்பாட்டு மோசமானது என்று தெரியும்’ என்கிற சுசித்ரா, அதை பாடியது ஏன்? அவராவது அப்போது சின்னப்பிள்ளை! அவரது அம்மா, பாட்டி தடுத்திருக்கலாமே!
“குரலில் காமம் இருக்கிறது” என்று சொல்லி இருக்கிறார். அப்போதே, “மரியாதையா போனை வை” என்று சொல்லி இருக்கலாமே. எதற்காக ( பாட்டியுடன்) வைரமுத்து வீட்டுக்குச் செல்ல வேண்டும்?
உடன் வந்த பாட்டியாவது வைரமுத்துவை கண்டித்திருக்கலாம்… பாலிஷாக பேசியது ஏன்?
சரி, அந்த ஷாம்பு பாட்டிலையாவது வாங்காமல் வந்திருக்கலாமே…
இவர்கள் சொல்வதை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை விசாரித்தால் எப்படி இருக்கும்?
ஒரு படத்தில வடிவேலு காமெடி வருமே…
“ஏய்.. கையப்பிடிச்சு இழுத்தியா…”
“என்ன கையப்பிடிச்சு இழுத்தியா..”
“ஏய்.. அந்த பொண்ணை கையப்பிடிச்சு இழுத்தியா…”
“என்ன அந்தப் பெண்ணை கையப்பிடிச்சு இழுத்தியா..”
-இந்த ரேஞ்சில்தான் போகும்.
மணிப்பூர் பலாத்கார கொடூரங்கள், பொள்ளாச்சி பாலியல் பயங்கரவாதம் போன்ற வழக்குகளின் நிலை என்னவென்று தெரியவில்லை!
போக்சோ வழக்குகளில் மிக மிகக் குறைந்த சதவிகிதமே, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கிறது.
இதெல்லாம் இப்போது மீடியாவில் முக்கியத்துவம் பெறவில்லை..
சுசித்ரா போன்றவை, குறுக்க மறுக்க ஓடுவதும்.. அதை மீடியா ஹைலைட் செய்வதும்…
த்தூ!” – இவ்வாறு பத்திரிகையாளர் டி.வி.சோமு அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
