மதுரை மண்வாசனையோடு ஜீவாவின் அடுத்த வேட்டை! ‘தகப்பன்’ படப்பிடிப்பு கோலாகலத் தொடக்கம்!
‘கருடன்’, ‘மாமன்’ எனத் தொடர் ஹிட்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் கெத்து காட்டி வரும் லார்க் ஸ்டூடியோஸ், அடுத்ததாக நடிகர் ஜீவாவுடன் கை கோர்த்துள்ளது. இவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, மதுரையில் இன்று பூமி பூஜையுடன் அதிரடியாகத் தொடங்கியிருக்கிறது!
‘TTT’ படத்தின் செம ஹிட்டைத் தொடர்ந்து, ஜீவா மீண்டும் மதுரை பின்னணியில் ஒரு கெத்தான, அதேசமயம் நெஞ்சைத் தொடும் கதையில் களம் இறங்குகிறார். ‘கிடா’ படம் மூலம் விமர்சகர்களின் மனதைக் கவர்ந்த ரா. வெங்கட் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்ற்றுள்ளார்.
நட்சத்திர கூட்டணியும் தொழில்நுட்ப டீமும்:
-
கதாநாயகி: தேசிய விருது பெற்ற திறமைசாலி நடிகை ரஜிஷா விஜயன் ஜீவாவுக்கு ஜோடியாகிறார்.
-
கதைக்களம்: தந்தை – மகன் பாசம், குடும்ப உறவுகளின் ஆழம் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட தரமான ஃபேமிலி டிராமா.
-
ஒளிப்பதிவு: M. சுகுமார்
-
படத்தொகுப்பு: நாகூரான் ராமச்சந்திரன்
-
தயாரிப்பு: K. குமார் (லார்க் ஸ்டூடியோஸ்)
-
ஆடியோ ரைட்ஸ்: திங்க் மியூசிக்
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே கட்டமாக (Single Schedule) முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. வலுவான கதைக்களம், திறமையான பட்டாளம் என உருவாகி வரும் ‘தகப்பன்’, ஜீவாவின் கரியரில் நிச்சயம் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!
