‘LOVE PROJECT’: காதலுக்கு ஒரு புதிய மொழி! 

 ‘LOVE PROJECT’: காதலுக்கு ஒரு புதிய மொழி! 

ன்றைய தலைமுறையின் காதலை, அவர்களின் அலைவரிசையிலேயே பேச வருகிறது ‘LOVE PROJECT’ திரைப்படம்.

இளம் திறமைசாளியான D.I. கபில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் அவதாரமெடுத்துள்ள படம் இது. முன்னதாக முன்னணி நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்படங்களில் இணைந்து பணியாற்றிப் பட்டையைத் தீட்டிய அனுபவத்தோடு, இப்போது தனது முதல் முழுநீள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கம்பீரமாக நடைபோடுகிறார்.

நட்சத்திர பட்டாளமும் தொழிநுட்பமும்:

  • நாயகி: சங்கீதா

  • முக்கியக் கதாபாத்திரங்கள்: விஜய் டிவி சக்திவேல், குண்டு சத்யா, வினோத், விஜய் சேனாதிபதி

  • ஒளிப்பதிவு: சாதிக் கபீர்

  • இசை & பாடல்கள்: சிமியோன் டெல்பர்

  • படத்தொகுப்பு: அபினேஷ்

  • நடனம்: தேவா

இயக்குநர் D.I. கபில் பகிர்ந்த சுவாரஸ்யம்:

“இன்றைய இளைஞர்களின் காதல், அவர்களின் உணர்ச்சிகள், உறவுகளின் ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தான் இந்த ‘LOVE PROJECT’ உருவாகியிருக்கிறது. புதிய பாணி திரைக்கதை, வித்தியாசமான காட்சியமைப்பு, தரமான தொழில்நுட்பம் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறோம். காதலை ஒரு புதுப் பார்வையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம். கண்டிப்பாய் இது ரசிகர்கள் மனதில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.”

தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் பாய்வேகத்தில் நடந்து வருகின்றன. ‘ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்’ மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

புதுமையான காதலைக் கொண்டாடத் தயாராகுங்கள்… ‘LOVE PROJECT’ விரைவில் திரையில்!

Related Posts