‘கோழிப்பண்ணை செல்லதுரை’ ஓர் காவியம்!: சர்வதேச பயிற்றுநர், உதயசான்றோன்

‘கோழிப்பண்ணை செல்லதுரை’ ஓர் காவியம்!: சர்வதேச பயிற்றுநர், உதயசான்றோன்
டாக்டர் டி.அருளானந்து – மேத்யூ அருளானந்து தயாரிக்க,  தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில்  ஏகன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம்,  ‘கோழிப்பண்ணை செல்லதுரை’.
யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.
இப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்தவர்கள் அனைவரும், நெகிழ்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிறந்த நூலுக்கான தமிழக அரசு விருது பெற்ற ஆசிரியர்.
உலக சாதனைப் படைத்த சர்வதேச பயிற்றுநர், உதயசான்றோன் கருத்து இது:
“எளிமையான வாழ்வியலை, தாய் தந்தையின் ஆதரவு இல்லாமல் கதாநாயகன் எப்படி தன் தங்கையை கரை சேர்க்க தன்னை தியாகம் செய்கிறார் என்பதை உணர்வுபூர்வமாக படம் ஆக்கி இருக்கிறார்கள்.
ஒரு எளிய கிராமத்து இளைஞனாக கதையில் புதுமுக நடிகர் என்று எந்த விதத்திலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் தத்ரூபமாக வாழ்ந்திருக்கிறார் கதாநாதானாயகனாக நடித்துள்ள திரு. ஏகன் அவர்கள்… மிகப் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது தம்பி! Advance வாழ்த்துக்கள்!
அவர் மட்டுமா படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்த காவியமாகவே மாறி இருக்கிறார்கள் என்றால் மிகையில்லை .
ஒவ்வொரு காட்சியையும் இசையால் பின்னிப் பிணைத்து எப்படி சிற்பி கல்லை செதுக்கி சிலை ஆக்குவாறோ அதைப் போல இசையால் அற்புதமாக செதுக்கியிருக்கிறார்.. ஓர் அற்புத இசைஅனுபவத்தை தருகிறார் திரு.ரகுநந்தன் இசையமைப்பாளர் அவர்கள்.. பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு மிகவும் ரம்யமாக இருக்கிறது ..திரு. வைரமுத்து அவர்கள் தன் வைர வரிகளால் பாடல்களுக்கு உயிர் கொடுத்துள்ளார் என்றால் மிகையில்லை .. பாடல்கள் அனைத்தும் மிக அருமை ! கேட்க கேட்க ஆனந்தம்.. நீங்களும் கேளுங்கள் நிச்சயம் உணர்வீர்கள்…
மிகவும் உயிரோட்டமாக சிறுகதையை படித்தால், ஒருவர் தன் வாழ்க்கையில் நடந்ததை கூறினால் எப்படி உணருவோமோ அதைப்போல மிகவும் யதார்த்தமாக அந்த காலகட்டத்தில் அனுபவங்களை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து உணர்வுபூர்வமாக நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் திரு சீனு ராமசாமி அவர்கள். அவர்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..
கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் மீது நம்பிக்கை வைத்து எந்த சமரசமும் செய்யாமல் அதீத பொறுப்போடு முழு அர்ப்பணிப்போடு ஒவ்வொன்றையும் சீரும் சிறப்புமாக செய்து வரும் 20ஆம் தேதி செப்டம்பர் இந்த திரைக்காவியத்தை உலகம் முழுவதும் வெளியிட இருக்கின்ற அன்பு சகோதரர் தயாரிப்பாளர் திரு.அருளானந்து அவர்களுக்கும் மற்றும் படக்குழுவிற்கு மனநிறந்த வாழ்த்துக்கள் !
அண்ணன் தங்கை பாசம், காதல், நட்பு, குடும்பப் பாசம் ,  அண்ணனின் பொறுப்பு,நன்றியுணர்வு.. எதார்த்த வாழ்வியல் என அத்தனை விஷயங்களையும் இந்தப் படத்தில் அழகா கையாண்டு இருக்கிறார்கள்…நிச்சயம் தமிழ் கூறும் நல் உலகம் இது போன்ற காவியங்களை வரவேற்க வேண்டும்…
எப்படி பாசமலர், கிழக்குச் சீமையிலே பெரும் வெற்றி அடைந்ததோ அப்படி இந்த படமும் வெற்றி அடைய வேண்டும் .. நிச்சயம் வெற்றி அடையும் .. தமிழ் கூறும் நல்லுலகில் இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பட்டித் தொட்டி எங்கும் இந்த பாடல்கள் பிரபலமாகும் பாருங்கள்!
அதிகப் பொருட்செலவு ,முன்னணி நடிகர்கள் , எல்லாம் பிரமாண்டம் என்று இருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் நல்ல கதை அம்சம் உள்ள புதிய காதா நாயகர்கள் நடித்த சிறிய பஜ்ஜெட் படங்களும் வெற்றி பெற்று வருவது திரைத்துறைக்கு ஆரோக்கியமான விஷயமான பார்க்கின்றேன் .. எல்லா முன்னணி நடிகர்களும் ஒரு காலத்தில் அறிமுகம் நடிகர்கள் தானே! அனைத்து படங்களையும் பாருங்கள்!
ஓர் எளிய காவியத்தை தமிழ்கூரும் நல்லுலகத்தை நம்பி இந்தப் படக்குழு எடுத்து இருக்கிறது! அனைவரும் வரவேற்போம்! வெற்றி வாகை சூட வைப்போம்!
மீண்டும் உற்சாகமான வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மனம் மகிழ்கிறேன்” என
உதயசான்றோன் தெரிவித்து உள்ளார்.