இந்தியன் -2 :  சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

இந்தியன் -2 :  சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி கண்ட திரைப்படம், ‘இந்தியன்’. இதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்தனர்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருந்தார்.

இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ நாளை வெளியாகிறது. இதில்,  கமல் நாயகனாக நடிக்க, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் அனிருத் இசை அமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் படம் நாளை (ஜூலை 12-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.lg

இதையடுத்து சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தது. இக் கோரிக்கையை ஏற்று  ‘இந்தியன் 2’ திரைப்படத்துக்கு நாளை ஒரு நாள் (12.07.2024) மட்டும் சிறப்புக் காட்சி திரையிட  அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

இதன்படி, இந்தியன்-2 திரைப்படம் வெளியாகும் நாளான நாளை  காலை 9 மணி முதல், மறுநாள் 13-ம் தேதி அதிகாலை 2 மணி வரை ஐந்து காட்சிகள் திரையிட முடியும். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகப்படுத்தி உள்ளது.